ஏரண், பண்டைய நகரம்
ஏரண் (Eran) (இந்தி: ऐरण) பண்டைய இந்தியாவின் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டைய வரலாற்று நகரம் ஆகும். துவக்கால நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்நகரத்தை ஏரிகிணா ஐரிகிணா (Airikiṇa) (இந்தி: ऐरिकिण) எனக் குறிப்பிட்டுள்ளது.


ஏரணின் அமைவிடம்
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கி மீ தொலைவில் வீணா தாலுகாவில் பீணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறு கோட்டையும் உள்ளது. [1]
குப்தப் பேரரசின் ஐரிகிணா பிரதேசம் அல்லது ஏர்கிணா பிரதேசத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாக ஏரண் விளங்கியது.[2] பண்டைய ஏரணில் கிடைத்த 48 அடி உயர கொடி மரம் போன்ற கல்தூண்[3] குறிப்புகளின் படி, வடக்கே யமுனை ஆறு தெற்கே நர்மதை ஆறு பாயும் பரப்புகளை ஆண்ட சுரேஷ்மிசந்திரன் எனும் அரசன் புத்தகுப்தரை மகாராஜா அழைத்தார் எனக் கூறுகிறது. [4] மதுராவில் கிடைக்கப் பெற்ற, புத்தகுப்தர் ஆட்சிக் காலத்திய கௌதம புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகள், புத்தகுப்தர் தனது ஆட்சிப் பரப்பை வடக்கு மதுரா வரை நீட்டித்ததாக கூறுகிறது. [5]பண்டைய ஏரண் நகரத்தில் குப்தர்கள் காலத்திய நாணயங்கள், கல்வெட்டுக் குறிப்புகள் பல கிடைத்துள்ளது.
வரலாறு
ஏரண் நகரம் நாக குலத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது என மகாபாரத்தின், ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. [6]
மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள், சகர்கள், நாகர்கள், குப்தர்கள், ஹூணர்கள், காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஏரணில் நடந்த பத்துக் கூட்டுத் தீக்குளிப்பு தொடர்பான பத்து நினைவுத் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [7]
ஏரணில் கண்டெடுக்கப்பட்ட தொன்மை ஆவணங்கள்
ஏரண் நகரத்தில் பழமைச் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுக் குறிப்புகள், கோயில்கள், சிற்பங்கள் முதலியன அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப் பெற்றன. [8]
ஏரண் நாணயங்கள்
- முத்திரைக் காசுகள்
- சாதவாகனர்களின் நாணயங்கள்
- நாகர் இன மக்களின் நாணயங்கள்
- சகர்கள் மற்றும் மேற்கு சத்ரபதிகளின் நாணயங்கள்.
- குப்தப் பேரரசின் நாணயங்கள்
வரலாறு
மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள், சகர்கள், நாகர்கள், குப்தர்கள், ஹூணர்கள், காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


ஏரணில் உள்ள முக்கியக் கோயில்கள்
1. விஷ்ணு கோயில் [9]
- முற்கால குப்தர்கள் பாணியில் கட்டப்பட்ட கோயில் (கி பி 350)
2. வராகர் கோயில்
- பிற்கால குபதர்கள் பாணி கோயில், கி பி 480
3. நரசிம்மர் கோயில்
- முற்கால குப்தர்கள் பாணியிலான கோயில் கி பி 412
4. பழம் பெரும் அனுமார் கோயில்
- நாகரி பாணி கோயில், கி பி 750
5. 48 அடி உயர கருடத் தூண்
- பிற்கால குப்தர்கள் பாணியிலான நினைவுத் தூண், கி பி 465[10]
மேற்கோள்கள்
- (Fleet 1888, pp. 88-90)
- Raychaudhuri, Hemchandra (1972) Political History of Ancient India, University of Calcutta, Calcutta, p.495
- Dr. Mohan Lal Chadhar, Eran Ki Tamrapashan Sasnkriti, Sagar, MP 2009, pp 11,ISBN 81-89740-07-5
- Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp. 226–30
- Mahabharata (1.57.12)
- Dr.Mohan Lal Chadhar. Eran ek Sanskrit Dharohar, Aayu Publication, New Delhi, 2016 ISBN 978-93-85161-26-1
- Dr. Mohan Lal Chadhar,'Coins of Eran' Mekal Insights, Journal of Indira Gandhi National Tribal University, Amarkantak, Vol. II No.01,January 2010. P,94
- Dubey, Nagesh, Eran Ki Kala, Sagar,1997,pp, 11
- dr.Mohan Lal Chadhar." Archaeology of Central India" Edit Book, Published by S.K. Book Agency, Dariyaganj New Delhi, 2017 ISBN 978-93-8315-881-2
ஆதார நூற்பட்டியல்
- Bajpai, Krishnadutta D. (1967). Sagar Through the Ages. New Delhi.
- Bajpai, Krishnadutta D. (1996). Indian Numismatic Studies. New Delhi.
- Bajpai, Krishnadutta D. (2003). S. K. Bajpai. ed. Indological Researches in India: Selected Works of Prof. K. D. Bajpai. Delhi: Eastern Book Linkers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7854-025-8.
- John Faithfull Fleet (1888). Corpus Inscriptionum Indicarum. 3. Calcutta: Government of India, Central Publications Branch.
- Chadhar, Mohanlal. (2009). Eran ki Tamrapashan Sanskriti. Sagar Madhya Pradesh: ISBN 81-89740-07-5.
- Chadhar, Mohanlal. (2016). Eran Ek Sanskrit Dharohar. New Delhi: ISBN 978-93-85161-26-1.
- Chadhar, Mohanlal. (2016). Eran Ek Parichay. Amarkantak Madhya Pradesh: ISBN 978-81-910189-7-4.
- Chadhar, Mohanlal. (2017). Art,Architecture and Archaeology of India. New Delhi: ISBN 978-93-8183-987-4.
- Chadhar, Mohanlal. (2017). Archaeology of Central India. New Delhi: ISBN 978-93-8315-881-2.