ஐந்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் ஐந்தாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

ஐந்தாவது நாளின் காலையில் பீஷ்மர், கௌரவர் படையை பலமாக வியூகப்படுத்தினார். பாண்டவர் படையை தருமர் வியூகப்படுத்தினார்.

இன்றும் பீஷ்மருக்கும் அருச்சுனனுக்கும் இடையில் கடுமையான போர் நடந்தது.

சிகண்டி பீஷ்மர் மீதும் துரோணர் மீதும் அம்புமாரி பொழிந்தான். சிகண்டி நுழைந்ததும் பீஷ்மர் விலகிச் சென்றார். சிகண்டி ஆண் பிறப்பல்ல என்றும் பெண்ணாக பிறந்து வளர்ந்தவன் என்றும் பெண்ணோடு போர் புரிவது அதர்மம் என்றும் பீஷ்மருடைய கொள்கை. பீஷ்மர் விலகியதைப் பார்த்த துரோணர், சிகண்டியை எதிர்த்தார். துரோணருடைய எதிர்ப்பை தாங்கமுடியாமல் சிகண்டி பின் திரும்பினான்.

நிகழ்ந்த முக்கிய மரணங்கள்

  • சாத்யகியின் பத்து மைந்தர்கள்
  • கௌரவர் படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள்

உசாத்துணை

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.