வீடுமர்

பீஷ்மர் மகாபாரதத்தின் தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் சாந்தனுவிற்கும் கங்கைக்கும் பிறந்தவர். சாந்தனு துஷ்யந்தனுக்கும், பரதனுக்கும் அடுத்த அரசன் ஆவார். பீஷ்மர் அரசியலை தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் இருந்தும், வேதங்களை வசிஷ்ட முனிவரிடமிருந்தும், வில்வித்தையை பரசுராமரிடம் இருந்தும் கற்றுக்கொண்டார். தன் தந்தை, சத்தியவதி பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி, மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும். மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.

கங்கை பீஷ்மரை சந்தனுவிடம் கையளிக்கும் காட்சி.

வெளி இணைப்பு

சான்றாவணம்

  1. Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK

இதனையும் காண்க

குருச்சேத்திரப் போர்

தலைமுறை அட்டவணை

பிரதிபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாக்லீகர்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்)(தாசி மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.