ஆடுதுறை - 11 (நெல்)

ஏ டி டீ - 11 (ADT 11) வட்டார வழக்கு நெல்லூர் சம்பா (Nellore samba) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 11
ADT 11
வேளாண் பெயர்
நெல்லூர் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
170 - 175 நாட்கள்
மகசூல்
3800 கிலோ எக்டேர்
வெளியீடு
1933
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1933 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 175 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம். போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

நீர்ப்பாசன வசதியுள்ள, காவிரி ஆற்று கழிமுகத்துவாரப் பகுதி, சேலம், மதுரை, மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படும் இந்த நெல் இரகம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3800 கிலோவரை (3.8 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இவ்வகையை சாகுபடி செய்ய, சம்பா மற்றும் தாளடி பருவங்கள் மிகவும் சிறந்தது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் சிறுத்து தடித்த வடிவில் காணப்படுகிறது.
  • இதன் அரிசி, ஏ டி டீ - 5 விடவும் தரமும் சிறந்ததுமாக உள்ளது [1][2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-13.
  2. "Rice Knowledge Management Portal ADT 11". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-20.
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-08-20.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.