புதுவை 1 (நெல்)

பி ஒய்- 1 (PY 1) (வேளாண் வழக்கு புதுவை பொன்னி (Puduvai Ponni) எனப்படும் இந்த நெல் வகை, பொன்னி மற்றும் ஐ ஆர் - 8 ( Ponni / IR 8) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[1]

புதுவை - 1
PY 1
வேளாண் பெயர்
புதுவை பொன்னி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பொன்னி X ஐ ஆர் - 8
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
5500 கிலோ எக்டேர்
வெளியீடு
1979
வெளியீட்டு நிறுவனம்
புதுவை வேளாண் அறிவியல் நிலையம்
மாநிலம்
புதுச்சேரி
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1979 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

காலம்

மத்தியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற மத்தியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[3][4]

சாகுபடி

உப்பு நிலத்தில் சகித்து வளரக்கூடிய இந்த நெல் வகை,[3] இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[1]

  • இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை (5 5 t/ha) மகசூல் தரக்கூடியது.[3]
  • இவ்வகையின் அரிசி சன்ன (மெல்லிய) இரகமாக காணப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. "PY 1". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2018-06-27.
  2. "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-06-27.
  3. "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:". www.icar-iirr.org (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-06-28.
  4. "Variety PY1". btistnau.in (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-07-03.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.