ஐ ஆர் - 579 (நெல்)

ஐ ஆர் - 579 (IR-579) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால, நெல் வகையாகும். சூலை - ஆகத்து மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] தடுகன் (Tadukan) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, அதி உயர பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடியது. மேலும் இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்து காணப்படுகிறது. 1977 இல், எகிப்தியர்கள் கண்டறிந்ததாக கருதப்படும் இந்த நெல் வகை,[2] வடஇந்தியப் பகுதியான இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3]

ஐஆர்-579
IR-579
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
தடுகன் x ஐ ஆர் 8
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
5000 கிலோ எக்டேர்
வெளியீடு
1978
நாடு
 இந்தியா

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.