புதுவை 5 (நெல்)

பி ஒய்- 5 (PY 5) (வேளாண் வழக்கு அரவிந்தர் ( Aravindar) எனப்படும் இந்த நெல் வகை, சுவர்ணதன் மற்றும் என் எல் ஆர் - 9674 (Swarnadhan x NLR 9674)[2] போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[1]

புதுவை - 5
PY 5
வேளாண் பெயர்
அரவிந்தர்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சுவர்ணதன் X என் எல் ஆர் - 9674
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
6000 கிலோ எக்டேர்
வெளியீடு
1994
வெளியீட்டு நிறுவனம்
புதுவை வேளாண் அறிவியல் நிலையம்
மாநிலம்
புதுச்சேரி
நாடு
 இந்தியா[1]

வெளியீடு

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1994 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]

காலம்

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 100 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள், சொர்ணவாரி பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

சாகுபடி

பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

  • இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 6000 கிலோவரை (6, 0 t/ha) மகசூல் தரக்கூடியது.[1]
  • நீண்ட மெல்லிய, வெள்ளை அரிசியைக்கொண்ட நெல் இரகமாகும்.[1]

சான்றுகள்

  1. "P.K. Krishi Vigyan Kendra PuducherryVarieties developed and released: -". www.icar-iirr.org (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-07-07.
  2. Varietal variations in flag leaf area and yield in mutant lines of PY 5 rice
  3. "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்) (© 2018). பார்த்த நாள் 2018-07-07.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.