சீரகச் சம்பா (நெல்)

சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும். சீரகம் எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு "சீரகச் சம்பா" எனப் பெயரிடப்பட்டுள்ளது.[2] இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.[3] இந்த அரிசியின் சோறு மருத்துவப் பயனுடையது.

சீரகச் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
125 130 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

பயிரிடப்படும் இடங்கள்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடப்படும் இந்த நெல் இரகம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் பெருமளவில் வேளாண்மைச் செய்யப்படுகிறது.

சிறப்பு

சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது. இது, எளிதாக செரிப்பதோடு, இரைப்பை ஒழுங்கீனங்களை தடுத்து பசியைத் தூண்டக்கூடியது.[4] ஆரம்ப நிலையிலுள்ள, வாத நோய்களைப் போக்கவல்லது[5][6].

அகத்தியர் குணபாடம்

சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து.

மேற்கூறிய பாடலின் பொருளானது, ”இனிப்புள்ள சீரகச்சம்பா அரிசியை உண்பவர்களுக்கு, மீண்டும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களைப் போக்கும்” என்பதாகும்.[7]

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.