தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். மாநிலத்தின் 12 ஆவது மாநகராட்சியாக தஞ்சாவூர் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. முதல் 70.23 வரையிலான அட்சரேகை இடையே உள்ளது.ஒருங்கிணைந்த தஞ்சவூா் மாவட்டம் பெரிய பரப்பளவில் இருந்ததால் அதன் நிருவாக நலன் கருதி திருவாரூா், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும் கும்பகோணம் கோட்டத்திலிருந்து, வலங்கைமான் வட்டத்தையும் பிரித்து, நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம்19.01.1991 அன்று ஏற்படுத்தப்பட்டது.பின்னர் நிரிவாக நலன் கருதி 1997ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து திருவாரூா் மற்றும் மன்னார்குடி கோட்டங்களை உள்ளடக்கிய திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூா் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது.கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், வடகிழக்கே கடலூர் மாவட்டம், வடக்கே அரியலூர் மாவட்டம், மேற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டம், தெற்கே வங்காள விரிகுடா கடல் பகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லைகளாக கொண்டுள்ளது.[1]

தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
தலைநகரம் தஞ்சாவூர்
மிகப்பெரிய நகரம் தஞ்சாவூர்
மாவட்ட ஆட்சித் தலைவர்
அண்ணாதுரை
பரப்பளவு 3,411 சகிமீ
மக்கள் தொகை
(கணக்கெடுப்பு வருடம்)
அடர்த்தி
2405890 (2011)
705
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 9 3
வருவாய் கிராமங்கள் 906
ஊராட்சி ஒன்றியங்கள் 14
மாநகராட்சி 1
நகராட்சிகள் 2
பேரூராட்சிகள் 23
ஊராட்சிகள் 589
பின்குறிப்புகள்:https://thanjavur.nic.in

வரலாறு

பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது தஞ்சாவூராகும். தஞ்சை மராட்டியரிடம் இருந்து இப்பகுதியின் ஆட்சி உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் 1798 இல் இதை ஒரு மாவட்டமாக உருவாக்கினர்.

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 50 உள்வட்டங்களையும் [2], 906 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3] இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் மொத்தத நீளம் 1057 கி.மீ. ஆகும். அதில் தேசிய நெடுஞ்சாலை மொத்த நீளம் 144.8 கி.மீ. தமிழ்நாட்டு நெடுஞ்சாலை மொத்த நீளம் 469 கி.மீ. இம்மாவட்ட சாலை பராமரிப்பு மொத்த நீளம் 444 கி. மீட்டர்களாகும்.[4]

வருவாய் கோட்டங்கள்

வருவாய் வட்டங்கள்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள்[5][6], 589 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.[7]

மாநகராட்சி

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

மக்கள்தொகை பரம்பல்

3,411 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 2,405,890 ஆகும். அதில் ஆண்கள் 1,182,416 ஆகவும்; பெண்கள் 1,223,474 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.56% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1035 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 705 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 82.64% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 238,598 ஆகவுள்ளனர்.[8] இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 2,075,870 (86.28 %), கிறித்தவர்கள் 133,971 (5.57 %) இசுலாமியர் 190,814 (7.93 %) ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் மக்கள் தொகை அடா்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 708 போ்கள் உள்ளனர். இம்மாவட்ட மக்களில், நூற்றுக்கு 82.72 சதவிதம் மக்கள் படிப்பறிவு பெற்றுள்ளனா்.

அரசியல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கான இரு மக்களவைத் தொகுதிகளும், எட்டு மாநில சட்டமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.[9]

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி), பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி), பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி), திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும் கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி), திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி), பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுடன் நாகப்பட்டிணம் மாவட்டத்திலிருக்கும் மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி), சீர்காழி (தனி) (சட்டமன்றத் தொகுதி), பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)களும் சேர்த்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தொகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது.

தொகுதிஉறுப்பினர்கட்சி
தஞ்சாவூர்எம். ரெங்கசாமிஅதிமுக
பேராவூரணிகோவிந்துராசுஅதிமுக
பட்டுக்கோட்டைசேகர் வி அதிமுக
ஒரத்தநாடுஇராமசந்திரன்திமுக
திருவையாறுதுரை சந்திரசேகரன்  திமுக
கும்பகோணம்க.அன்பழகன்திமுக
திருவிடைமருதூர்செழியன் கோவிதிமுக
பாபநாசம்இரா. துரைக்கண்ணுஅதிமுக

தஞ்சாவூர் வான்படைத் தளம்

தஞ்சாவூர் வான்படைத் தளம் (ஐஏடிஏ: TJV, ஐசிஏஓ: VOTJ) இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ள ஓர் படைத்துறை வானூர்தி நிலையமாகும்.

வேளாண்மை

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டத்திலே முதன்மை மாவட்டமாக விளங்கிவரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தில் மற்றும் அதன் தொடா்புடைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தம் நிலப்பரப்பான 3.39 லட்சம் எக்டேரில் சுமாா் 2.69 லட்சம் எக்டேரில் விவசாய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் முற்போக்கு சிந்தனையும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், அதிக மகசுல் எடுத்து வருமானத்தை பெருக்குவதில் இம்மாவட்ட விவசாயிகள் சிறந்து விளங்குகிறாா்கள். இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 9 தாலுக்காகளையும், 14 வட்டாரங்கள் மற்றும் 906 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி உள்ளது.

வேளாண் அரசுப் பிரிவுகள்

இம்மாவட்டத்தில் பல்வேறு பயிர் ஆராய்ச்சிகளும், முன்னெடுப்புத் திட்டங்களும் அரசுத்துறையால் செயற்படுத்தப்படுகின்றன.[10] உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வேளாண்குடிகளின் உற்பத்தியை பெருக்கி, அவர்கள் கூடுதல் வருமானம் பெரும் வகையில் மத்திய மாநில திட்டங்களை, பல்வேறு வேளாண்துறைகள், பல்நோக்கில் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிருஷி சஞ்சயி யோஜனா திட்டத்தின் கீழ் நுண்நீா்பாசன கருவிகளை பயன்படுத்தி நீா்மேலாண்மையில் ஈடுபடுத்தப் படுகிறது. பாரத பிரதமரின் புதிய பயிா் காப்பீட்டுத்திட்டம் செயற்படுத்தப் படுகிறது. நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைத்திட்டத்தின் வழி மானாவாரிப் பயிா்களான பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து பயிா்களில் அதிக மகசுல் பெற திட்டமிடப் பட்டுள்ளது. கூட்டுப்பண்ணைய திட்டமும், மண்வள மேம்பாட்டுத்திட்டங்களினால்,[11] பசுந்தாள் உரப்பயிா்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளும், தேசிய வேளாண் வளா்ச்சித்திட்டங்கள்(நெல், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, தென்னை மற்றும் பசுந்தாள் உரப்பயிா்கள்), தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய் பனை இயக்கமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நெல், பயறுவகை மற்றும் எண்ணெய்வித்துகளும் நல்ல சாகுபடி திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன.

குறிப்பாக, குறுவை மற்றும் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டங்களும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையும், உலக வங்கி நிதியுதவியுடன் ”நீா்வள நிலவளத்திட்டமும்”, ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்கள் மூலமாக பல்வேறு பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; இந்திய தொழில்நுட்ப உணவு பதனிடும் கழகம், தஞ்சாவூர்; மண் மற்றும் நீா் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம்; தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் வேளாண்மை கல்லூரி, ஈச்சங்கோட்டை, மாநில தென்னை நாற்றங்கால் , பட்டுக்கோட்டை, தென்னை ஒட்டுப்பணி மையம், மருங்கப்பள்ளம்; விதை சுத்திகரிப்பு நிலையங்கள், பட்டுக்கோட்டை, காட்டுத்தோட்டம், கும்பகோணம் மற்றும் மருதாநல்லூா்; கால்நடை ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு; ஆா்.வி.எஸ் விவசாய கல்லூரி, உசிலம்பட்டி, தஞ்சாவூர்; உழவா் பயிற்சி நிலையம், சாக்கோட்டை; இது தவிர தோட்டக்கலைதுறை, வேளாண்மை விற்பனை துறை , வேளாண் பொறியியல்துறை, விதை ஆய்வு , விதைச்சான்று மற்றும் விதை பரிசோதனை துறைகளும், பல்வேறு வேளாண்மை வளர்ச்சிகளுக்கு இயங்கி வருகின்றன. கரும்பு பயிரில் அதிக மகசுல் பெறுவதற்கு அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை, குருங்குளம்,திருஆருரான் சா்க்கரை ஆலை, திருமண்டங்குடி, ஸ்ரீ அம்பிகை சா்க்கரை ஆலை, துகிலி மற்றும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.[12]

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Thanjavur and Dindigul to be upgraded as City Municipal Corporations". Chennaionline.com. http://news.chennaionline.com/chennai/Thanjavur--Dindigul-to-be-upgraded-as-City-Corporations/e665780a-8be1-41ad-8997-20fe45d5815d.col. பார்த்த நாள்: 10 April 2013.
  2. தஞ்சாவூர் மாவட்ட வருவாய் நிர்வாகம்
  3. Thanjavur District Revenue Villages List
  4. https://www.tnhighways.gov.in/index.php/en/
  5. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  6. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
  7. தஞ்சாவூர் மாவட்ட கிராம ஊராட்சிகள்
  8. Thanjavur District : Census 2011 data
  9. Elected Representatives
  10. https://thanjavur.nic.in/agriculture-2/
  11. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/9526/8/08_chapter%204.pdf
  12. http://dcmsme.gov.in/dips/2016-17/DIP.THANJAVUR.2015.16.pdf

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.