இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் (Ramanathapuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே பாக் நீரிணையும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் மதுரை மாவட்டமும் தென்மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம்
Ramanathapuram district
முகவை மாவட்டம்
மாவட்டம்

தமிழ்நாட்டில் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெரிய நகரம்இராமநாதபுரம்
தலைமையகம்இராமநாதபுரம்
வட்டங்கள்கடலாடி
கமுதி
கீழக்கரை
முதுகுளத்தூர்
பரமக்குடி
போகலூர்
இராமநாதபுரம்
இராமேசுவரம்
இராஜசிங்கமங்கலம்
திருவாடானை
அரசு
  ஆட்சியர்வீரராகவராவ்,[1] இ.ஆ.ப
  காவல்துறைக் கண்காணிப்பாளர்மணிவண்ணன்
மக்கள்தொகை (2011)
  மொத்தம்13,53,445
மொழிகள்
  அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
குறியீடு623xxx
தொலைபேசிக் குறியீடு04567
வாகனப் பதிவுTN-65[2]
அமைவிடம்:9°16′N 77°26′E
இணையதளம்ramanathapuram.nic.in

வரலாறு

1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்தல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இராமநாதபுரம், முகவை மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகை ஆறு, பாக்கு நீரிணையில் தன் பயணத்தை முடிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 15.03.1985 அன்று , இராமநாதபுரம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது:

  1. திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டங்கள் கொண்ட சிவகங்கை மாவட்டம்.
  2. திருவில்லிபுத்தூர், விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் இராஜபாளையம் வட்டங்கள் உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டம்.
  3. திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம், ராமேஸ்வரம் வட்டங்கள் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம்.

2018 இல் இராஜசிங்கமங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) என்ற புதிய தாலுகா உருவாக்கப்பட்டது.2019 இன் நிலவரபடி , இராமநாதபுரம் மாவட்டமானது கடலாடி, கீழக்கரை மற்றும் இராஜ சிங்க மங்கலம் (ஆர். எஸ். மங்கலம்) ஆகிய மூன்று வட்டங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது வட்டங்கள் கொண்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

4,104 3,703 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 1,353,445 ஆகும். அதில் ஆண்கள் 682,658 ஆகவும்; பெண்கள் 670,787 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 13.96% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 330 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 80.72% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 140,644 ஆகவுள்ளனர்.[4]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 77.39% ஆகவும், கிறித்தவர்கள் 6.73% ஆகவும், இசுலாமியர்கள் 15.37 % ஆகவும், மற்றவர்கள் 0.50% ஆகவும் உள்ளனர்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இராமநாதபுரம் மாவட்டத்தின், இராமநாதபுரம் வருவாய்க் கோட்டத்தில் 5 வருவாய் வட்டங்களும், பரமக்குடி வருவாய்க் கோட்டத்தில் 5 வட்டங்களும் உள்ளன. இந்த 10 வருவாய் வட்டங்களில் 38 உள்வட்டங்களும், 400 வருவாய் கிராமங்களும் உள்ளது.[5]

இராமநாதபுரம் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

பரமக்குடி கோட்டத்தின் வருவாய் வட்டங்கள்

உள்ளாட்சி நிர்வாகம்

இராமநாதபுரம் மாவட்டம் 4 நகராட்சிகளும், 12 பேரூராட்சிகளும் கொண்டது.[6]

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊரக வளர்ச்சி நிர்வாகம்

இம்மாவட்டம் ஒரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 11 ஊராட்சி ஒன்றியங்களும், 429 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[12]

ஊராட்சி ஒன்றியங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஊராட்சி ஒன்றியங்கள்.

  1. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்
  2. பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்
  3. கடலாடி ஊராட்சி ஒன்றியம்
  4. கமுதி ஊராட்சி ஒன்றியம்
  5. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
  6. திருவாடானை ஊராட்சி ஒன்றியம்
  7. போகலூர் ஊராட்சி ஒன்றியம்
  8. மண்டபம் ஊராட்சி ஒன்றியம்
  9. நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்
  10. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்
  11. இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது.[13]

இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும்

தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
பரமக்குடி (தனி)என்.சதன் பிரபாகர்அதிமுக
திருவாடாணைசே. கருணாஸ்அதிமுக
ராமநாதபுரம்டாக்டர் எம். மணிகண்டன்அதிமுக
முதுகுளத்தூர்மலேசியா எஸ். பாண்டியன்காங்கிரசு

தீவுகள்

மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:

ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

ஆன்மிகத் தலங்கள்

  • உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமிஆலயம்
  • பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்
  • பரமக்குடி முத்தாலம்மன் கோயில்
  • பரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில்
  • வரதரராஜ பெருமாள் கோவில் (எமனேஸ்வரம்,பரமக்குடி)
  • நயினார்கோவில் நாகநாதசுவாமி ஆலயம்
  • ஓரியூர்அருளானந்தர் சர்ச்
  • ஏர்வாடி தர்ஹா
  • தேவிபட்டினம் நவபாஷனம்
  • உப்பூர் வெயிலுகுகந்த விநாயகர் திருக்கோவில்
  • பெருவயல் ரணபலி முருகன் கோயில்
  • இராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில் மற்றும் குமரைய்யாகோவில்
  • குண்டுக்கரை முருகன் கோயில்
  • இராமநாதபுரம் கூரிச்சாத்தா அய்யனார் திருக்கோவில்
  • கீழக்கரை மீனாட்சி அம்மன்கோயில்
  • ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவில்

சுற்றுலாத் தலங்கள்

  • காரங்காடு சூழல் சுற்றுலா மையம்
  • குருசடை தீவு சுற்றுலா
  • பாம்பன் குந்துக்கால் மண்டபம்
  • வாலிநோக்கம் கடற்கரை
  • அரியமான் கடற்கரை
  • கமுதி கோட்டைமேடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.