இராஜசிங்கமங்கலம்
இராஜசிங்கமங்கலம் அல்லது ஆர். எஸ். மங்கலம் (ஆங்கிலம்:R.S.Mangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
இராஜசிங்கமங்கலம் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | இராஜசிங்கமங்கலம் வட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | கே. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,565 (2011) • 1,099/km2 (2,846/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 13.25 சதுர கிலோமீட்டர்கள் (5.12 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/r-s-mangalam |
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,481 வீடுகளும், 14,565 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 13.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியானது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
இங்கு தமிழகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய கண்மாயான இராஜசிங்கமங்கலம் கண்மாய் உள்ளது.[6][7][8]. நாரை தாவாத நாற்பதெட்டு மடை உள்ள கண்மாய் எனும் சிறப்பு இதற்கு உண்டு. இங்கு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளது. அருகில் உள்ள கிராமங்கள் முழுவதற்கும் இதுதான் பெரிய ஊர். இங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி,போக்குவரத்து வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகள் முழுவதும் உள்ளது.
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- http://www.hindu.com/2005/12/02/stories/2005120208310300.htm
- http://www.thehindu.com/todays-paper/article3511108.ece
- http://www.hindu.com/2006/12/21/stories/2006122113400300.htm