கடலாடி (வட்டம்)

கடலாடி வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கடலாடி நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் எஸ். தாரைக்குடி, சாயல்குடி, ஆப்பனூர், கடலாடி, மேலச்செல்வனூர் மற்றும் சிக்கல் எனும் 6 உள்வட்டங்களும் 45 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2] அவைகள்:

  1. A. நெடுங்குளம்
  2. A.உசிலங்குளம்
  3. அளவங்குளம்
  4. ஆப்பனூர்
  5. அவந்தாண்டை
  6. ஏர்வாடி
  7. இருவேலி
  8. இதம்பாடல்
  9. K .வேப்பங்குளம்
  10. கடலாடி
  11. கடுகுசந்தை
  12. கண்ணிரஜபுரம்
  13. கீழக்கிடாரம்
  14. கீழச்செல்வனூர்
  15. கீரந்தை
  16. கொக்கரசன் கோட்டை
  17. கொண்டுநல்லான்பட்டி
  18. குறிச்சிகுளம்
  19. குதிரைமொழி
  20. M .கரிசல்குளம்
  21. மாரந்தை மாரியூர்
  22. மீனங்குடி
  23. மேலக்கிடாரம்
  24. மேலச் செல்வநூர்
  25. கீழச் செல்வநூர்
  26. மூக்கையூர்
  27. நரிப்பையூர்
  28. ஓரிவயல்
  29. ஒருவாநேந்தல்
  30. பணிவாசல்
  31. பெயக்களம்
  32. பெரியகுளம்
  33. பிராமனங்குளம்
  34. புனவாசல்
  35. S .தரைக்குடி
  36. S .வாகைக்குளம்
  37. சாயல்குடி
  38. சிக்கல்
  39. சிப்பிகுளம்
  40. சிரைக்குளம்
  41. T .கரிசல்குளம்
  42. திருமால் கந்தன் கோட்டை
  43. T .வேப்பங்குளம்
  44. தனிச்சியம்
  45. வாலிநோக்கம்

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 145,277 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 73,448 ஆண்களும், 71,829 பெண்களும் உள்ளனர். 34,065 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 89.8% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.65% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15789 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 19,634 மற்றும் 12 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 74.81% %, இசுலாமியர்கள் 17.29%, கிறித்தவர்கள் 7.62% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.