வாலிநோக்கம்

வாலிநோக்கம் (ஆங்கிலம்:Valinokkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

வாலிநோக்கம்
வாலிநோக்கம்
இருப்பிடம்: வாலிநோக்கம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°09′47″N 78°38′46″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3]
பெருந்தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம்

தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே அதன் அளவாக 90 கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. மூன்று புறம் கடல் சூழ, அழகிய அமைதியான சூழலில் அமைந்துள்ளது[4]. கடற்கரையில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. நல்லதண்ணீர் தீவு இதன் அருகே அமைந்துள்ளது.

மக்கள்

இங்கு சுமார் பத்துயிரம் குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இங்கு பெரிய பள்ளிவாசல் உள்ளது.

வாலிநோக்கம் மூன்று புறம் கடல் சூழ அமைந்துள்ள எழில்மிகு கிராமமாகும். கடற்கரையில் கிடைக்கும் சுவைமிகு நல்ல தண்ணீரும், கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் நல்லதண்ணீர் தீவும் இந்த ஊருக்கு இறைவன் தந்த அருட்கொடையாகும். இந்த ஊர் பாரம்பரியமிக்க பழமைவாய்ந்த ஊர் என்பதற்கு இங்குள்ள பெரிய பள்ளிவாசல் சான்றாகத் திகழ்கிறது. இங்குபல ஆயிரம் குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாகவும் மீன்பிடித்தொழிலை பிரதானமாக கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

தொழில்

உப்பு உற்பபத்தி,[5] மற்றும் மீன்பிடித்தொழில் பிரதானமாகும் [6] வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

அரசு நிறுவனங்கள்

  • தமிழ்நாடுஅரசு உப்பு உற்பத்தி நிறுவனம்[7]
  • துறைமுகம், இங்குள்ள கப்பல் உடைப்பு நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை[8]

நிர்வாக அலகு

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.