இராணிப்பேட்டை மாவட்டம்

இராணிப்பேட்டை (Ranipet District) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 36-வது மாவட்டமாகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[3][4] இம்மாவட்டத்தின் தலைநகரம் இராணிப்பேட்டை நகரம் ஆகும். தமிழ்நாட்டின் 36-வதாக இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார். [5]

இராணிப்பேட்டை மாவட்டம்
RANIPET DISTRICT
மாவட்டம்
வேலூர் மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த இராணிப்பேட்டை மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
நிறுவிய நாள்28 நவம்பர் 2019 [1]
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
மண்டலம்தொண்டை நாடு
அரசு
  வகைமாவட்டம்
  Bodyஇராணிப்பேட்டை மாவட்டம்
  பெரிய நகரம்அரக்கோணம்
  மக்களவைத் தொகுதிகள்அரக்கோணம்
  சட்டமன்றத் தொகுதிகள்1.அரக்கோணம் 2.ஆற்காடு 3.இராணிப்பேட்டை 4.சோளிங்கர்
  மாவட்ட ஆட்சியர்திவ்யதர்ஷினி[2]
  வட்டங்கள்1.அரக்கோணம் 2.ஆற்காடு 3.நெமிலி 4.வாலாஜா
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 73
பிற பெரிய நகரங்கள்1.ஆற்காடு 2.வாலாசாபேட்டை
வருவாய் கோட்டங்கள்1.இராணிப்பேட்டை 2.அரக்கோணம்
நகராட்சிகள்1.அரக்கோணம் 2.ஆற்காடு 3.இராணிப்பேட்டை 4.வாலாஜாபேட்டை 5. மேல்விஷாரம்
காவல்துறை கண்காணிப்பாளர்திரு.மயில்வாகனண்

மாவட்ட நிர்வாகம்

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது. [6] [7]

வருவாய் வட்டங்கள்

  1. அரக்கோணம் வட்டம்
  2. வாலாஜா வட்டம்
  3. நெமிலி வட்டம்
  4. ஆற்காடு வட்டம்

உள்ளாட்சி நிர்வாகம்

நகராட்சிகள்

  1. அரக்கோணம்
  2. ஆற்காடு
  3. இராணிப்பேட்டை
  4. வாலாஜாபேட்டை
  5. மேல்விஷாரம்

பேரூராட்சிகள்

  1. கலவை
  2. காவேரிப்பாக்கம்
  3. நெமிலி
  4. சோளிங்கர்
  5. திமிரி
  6. பனப்பாக்கம்
  7. தக்கோலம்
  8. விளாப்பாக்கம்

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம்
  2. வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
  3. நெமிலி ஊராட்சி ஒன்றியம்
  4. ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்
  5. திமிரி ஊராட்சி ஒன்றியம்
  6. சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்
  7. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்
  8. கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

இம்மாவட்டப் பகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ளது. மேலும் இம்மாவட்டம் அரக்கோணம், ஆற்காடு, இராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.