தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 33 வது மாவட்டமாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[4] [5] இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். [6] 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.[7][8]

தென்காசி மாவட்டம்
  மாவட்டம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி ,
மாவட்ட துவக்கம் 22 நவம்பர் 2019 [1]
தலைமையகம் தென்காசி
மிகப்பெரிய நகரம் தென்காசி
மாநகரம் தென்காசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[2]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[3]
மாவட்ட ஆட்சியர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப
சட்டமன்றம் (தொகுதிகள்) 5 (5)
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்



     37 °C (99 °F)
     22 °C (72 °F)

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[9]

வருவாய் கோட்டங்கள்

  1. தென்காசி
  2. சங்கரன்கோவில்

வருவாய் வட்டங்கள்

  1. கடையநல்லூர் வட்டம்
  2. சங்கரன்கோயில் வட்டம்
  3. சிவகிரி வட்டம்
  4. ஆலங்குளம் வட்டம்
  5. வீரகேரளம்புதூர் வட்டம்
  6. தென்காசி வட்டம்
  7. செங்கோட்டை வட்டம்
  8. திருவேங்கடம் வட்டம்

நகராட்சிகள்

  1. கடையநல்லூர்
  2. தென்காசி
  3. சங்கரன்கோவில்
  4. புளியங்குடி
  5. செங்கோட்டை
  6. புளியங்குடி

பேரூராட்சிகள்

  1. குற்றாலம்
  2. சுரண்டை
  3. பண்பொழி
  4. இலஞ்சி
  5. செங்கோட்டை புதூர்
  6. அச்சம்புதூர்
  7. ஆலங்குளம்
  8. ஆய்க்குடி
  9. இராயகிரி
  10. சாம்பவர் வடகரை
  11. சுந்தரபாண்டிபுரம்
  12. வாசுதேவநல்லூர்
  13. சிவகிரி
  14. திருவேங்கடம்

ஊராட்சி ஒன்றியங்கள்

இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

  1. சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்
  2. மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
  3. குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
  4. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
  5. தென்காசி ஊராட்சி ஒன்றியம்
  6. செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
  7. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
  8. கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
  9. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.

ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

நீர்த்தேக்கங்கள்

  • ராமநதி
  • கடனாநதி
  • குண்டாறு
  • அடவிநயினார்
  • கருப்பாநதி
  • மோட்டை

அருவிகள்

  • பேரருவி
  • பழைய குற்றால அருவி
  • சிற்றருவி
  • ஐந்தருவி
  • புலியருவி
  • செண்பகாதேவி அருவி உள்ளிட்ட 9 அருவிகளை கொண்டது தென்காசி மாவட்டம்.

நதிகள்

  • சிற்றாறு
  • குண்டாறு நதி
  • ஹரிஹர நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.