தமிழக மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
தமிழக மாவட்டங்கள் | |
---|---|
![]() | |
அமைவிடம் | தமிழ்நாடு |
எண்ணிக்கை | 37 |
மக்கள்தொகை | 5,65,223 (பெரம்பலூர்) – 46,46,732 (சென்னை) |
பரப்புகள் | 426 கிமீ² (சென்னை) – 6188 கிமீ² (திருவண்ணாமலை) |
உட்பிரிவுகள் | தாலுக்காக்கள், வருவாய் கிராமங்கள் |
மாவட்டங்களை பிரித்தல் 2019
நவம்பர் 2019-இல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம், வேலூர் மாவட்டத்தை பிரித்து இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[1] [2] இப்புதிய மாவட்டங்களுக்கு 16 நவம்பர் 2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.[3]
வரலாறு

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது சென்னை மாநிலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[4]
- 1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
- 1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- 1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
- 2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
மாவட்டங்கள் பட்டியல்
பிரிவு வாரியாக மாவட்டங்களின் பட்டியல்
|
|
|
மக்கட் தொகை
தமிழக மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர்[5]. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14 பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71 சதவிகிதத்துடன் தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.
அட்டவணை
கீழே உள்ள அட்டவணையில் அனைத்து 37 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்படுகிறது.[6]
எண். | மாவட்டம் | குறியீடு | தலைநகரம் | நிருவப்பட்டது | முந்தைய மாவட்டம் | பரப்பளவு (கி.மீ²) | மக்கட்தொகை (2011 கணக்கெடுப்பின் படி) | மக்கட்தொகை அடர்த்தி (2011 கணக்கெடுப்பின் படி) (கி.மீ²) | தாலுகா/வட்டம் | வரைபடம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1. | அரியலூர்[7] | AR | அரியலூர் | 23 நவம்பர் 2007 | பெரம்பலூர் மாவட்டம் | 1,949.31 | 754,894 [8] | 387 | ![]() | |
2. | செங்கல்பட்டு | CG | செங்கல்பட்டு | 18 சூலை 2019 | காஞ்சிபுரம் மாவட்டம் | 2,945 | 2,556,423 | 868 | ||
3. | சென்னை[9] | CH | சென்னை | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 178.2 | 4,646,732 [10] | 26105 | ![]() | |
4. | கோயம்புத்தூர்[11] | CO | கோயம்புத்தூர் | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 4,723[12] | 3,458,045[13] | 732 | ![]() | |
5. | கடலூர்[14] | CU | கடலூர் | 30 செப்டம்பர் 1993 | தென்னாற்காடு மாவட்டம் | 3,678 | 2,605,914[15] | 709 | ![]() | |
6. | தருமபுரி[16] | DH | தருமபுரி | 2 அக்டோபர் 1965 | சேலம் மாவட்டம் | 4,497.77 | 1,506,843[17] | 335 | ![]() | |
7. | திண்டுக்கல்[18] | DI | திண்டுக்கல் | 15 செப்டம்பர் 1985 | மதுரை மாவட்டம் | 6,266.64 | 2,159,775[19] | 345 | ![]() | |
8. | ஈரோடு[20] | ER | ஈரோடு | 31 ஆகத்து 1979 | கோயம்புத்தூர் மாவட்டம் | 4,723 | 2,251,744[21] | 394 | ![]() | |
9. | கள்ளக்குறிச்சி | KL | கள்ளக்குறிச்சி | 08 சனவரி 2019 | விழுப்புரம் மாவட்டம் | |||||
10. | காஞ்சிபுரம்[22] | KC | காஞ்சிபுரம் | 1 சூலை 1997 | செங்கல்பட்டு மாவட்டம் | 1,448 | 1,441,829 | 1000 | ![]() | |
11. | கன்னியாகுமரி[23] | KK | நாகர்கோவில் | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று(கேரளாவிலிருந்து இணைக்கப்பட்டது) | 1,672 | 1,870,374[24] | 1119 | ![]() | |
12. | கரூர்[25] | KR | கரூர் | 30 செப்டம்பர் 1995 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் | 2,895.57 | 1,064,493[26] | 368 | ![]() | |
13. | கிருட்டிணகிரி[27] | KR | கிருட்டிணகிரி | 9 பெப்ரவரி 2004 | தர்மபுரி மாவட்டம் | 5,143 | 1,879,809[28] | 366 | ![]() | |
14. | மதுரை[29] | MA | மதுரை | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 3,741.73 | 3,038,252[30] | 812 | ![]() | |
15. | நாகப்பட்டினம்[31] | NG | நாகப்பட்டினம் | 18 அக்டோபர் 1991 | தஞ்சாவூர் மாவட்டம் | 2,715.83 | 1,616,450[32] | 595 | ![]() | |
16. | நாமக்கல்[33] | NM | நாமக்கல் | 1 சனவரி 1997 | சேலம் மாவட்டம் | 3363 | 1,726,601[34] | 513 | ![]() | |
17. | நீலகிரி[35] | NI | உதகமண்டலம் | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 2,452.5 | 735,394[36] | 300 | ![]() | |
18. | பெரம்பலூர்[37] | PE | பெரம்பலூர் | 30 செப்டம்பர் 1995 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் | 1,757 | 565,223[38] | 322 | ![]() | |
19. | புதுக்கோட்டை[39] | PU | புதுக்கோட்டை | 14 சனவரி 1974 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் | 4,663 | 1,618,345[40] | 347 | ![]() | |
20. | இராமநாதபுரம்[41] | RA | இராமநாதபுரம் | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 4,089.57 | 1,353,445[42] | 331 | ![]() | |
21. | இராணிப்பேட்டை | RN | இராணிப்பேட்டை | 15 ஆகத்து 2019 | வேலூர் மாவட்டம் | |||||
22. | சேலம்[43] | SA | சேலம் | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 5,205 | 3,482,056[44] | 669 | ![]() | |
23. | சிவகங்கை[45] | SI | சிவகங்கை | 15 மார்ச்சு 1985 | மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் | 4,086 | 1,339,101[46] | 328 | ![]() | |
24. | தென்காசி | TS | தென்காசி | 18 சூலை 2019 | திருநெல்வேலி மாவட்டம் | |||||
25. | தஞ்சாவூர்[47] | TJ | தஞ்சாவூர் | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 3,396.57 | 2,405,890[48] | 708 | ![]() | |
26. | தேனி[50] | TH | தேனி | 25 சூலை 1996 | மதுரை மாவட்டம் | 3,066 | 1,245,899[51] | 406 | ![]() | |
27. | தூத்துக்குடி[52]. | TK | தூத்துக்குடி | 20 அக்டோபர் 1986 | திருநெல்வேலி மாவட்டம் | 4,621 | 1,750,176[53] | 379 | ![]() | |
28. | திருச்சிராப்பள்ளி[54] | TC | திருச்சிராப்பள்ளி | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 4,407 | 2,722,290[55] | 618 | ![]() | |
29. | திருநெல்வேலி[56] | TI | திருநெல்வேலி | 1 நவம்பர் 1956 | 13 ஆரம்பகால மாவட்டங்களுள் ஒன்று | 6,810 | 3,077,233[57] | 452 | ![]() | |
30. | திருப்பத்தூர் | TP | திருப்பத்தூர் | 15 ஆகத்து 2019 | வேலூர் மாவட்டம் | |||||
31. | திருப்பூர்[58] | TP | திருப்பூர் | 22 பெப்ரவரி 2009 | கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் | 5,186.34 | 2,479,052[59] | 478 | ![]() | |
32. | திருவள்ளூர்[60] | TL | திருவள்ளூர் | 1 சூலை 1997 | செங்கல்பட்டு மாவட்டம் | 3,424 | 3,728,104[61] | 1089 | ![]() | |
33. | திருவண்ணாமலை[62] | TV | திருவண்ணாமலை | 30 செப்டம்பர் 1989 | வட ஆற்காடு மாவட்டம் | 6,191 | 2,464,875[63] | 398 | ![]() | |
34. | திருவாரூர்[64] | TR | திருவாரூர் | 18 அக்டோபர் 1991 | தஞ்சாவூர் மாவட்டம் | 2,161 | 1,264,277 [65] | 585 | ![]() | |
35. | வேலூர்[66] | VE | வேலூர் | 30 செப்டம்பர் 1989 | வேலூர் மாவட்டம் | 6,077 | 3,936,331 [67] | 648 | ![]() | |
36. | விழுப்புரம்[68] | VL | விழுப்புரம் | 30 செப்டம்பர் 1993 | தென்னாற்காடு மாவட்டம் | 7,217 | 3,458,873 [69] | 479 | ![]() | |
37. | விருதுநகர்[70] | VR | விருதுநகர் | 15 மார்ச்சு 1985 | மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் | 4,288 | 1,942,288 [71] | 453 | ![]() | |
சொடுகக்கூடிய வரைப்படம்

இதனையும் காண்க
மேற்கோள்கள்
- புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
- தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு!
- http://www.census2011.co.in/district.php
- "Districts of Tamil Nadu". Government of Tamil Nadu. பார்த்த நாள் 24 January 2014.
- Ariyalur District
- Ariyalur District Census 2011
- Chennai District
- Chennai District : Census 2011 data
- Coimbatore District
- "Coimbatore District Statistical Handbook". Coimbatore District Administration. பார்த்த நாள் 21 November 2015.
- Coimbatore District Census 2011
- Cuddalore District
- Cuddalore District Census 2011
- Dharmapuri District
- Dharmapuri District Census 2011 data
- Dindigul District
- Dindigul District : Census 2011 data
- Erode District
- Erode District : Census 2011 data
- Kanchipuram District
- கன்னியாகுமரி மாவட்டம்
- Kanniyakumari District Census 2011
- Karur District
- Karur District Census 2011
- Krishnagiri District
- Krishnagiri District - Census 2011
- Madurai District
- Madurai District Census 2011
- Nagapattinam District
- Nagapattinam District Census 2011
- Namakkal District
- Namakkal District - Census 2011
- Nilgiris District
- The Nilgiris District - Census 2011
- Perambalur District
- Perambalur District : Census 2011
- Pudukkottai District
- Pudukkottai District Census 2011
- Ramanathapuram District
- Ramanathapuram District Census 2011
- Salem District
- Salem District Census 2011
- Sivaganga District
- Sivaganga District Census 2011
- Tanjore Distrit
- Thanjavur District Census 2011
- "Mapp of Thanjavur district". Government of Tamil Nadu (2009). பார்த்த நாள் 24 January 2014.
- Theni District
- Theni District : Census 2011
- தூத்துக்குடி மாவட்டம்
- Thoothukkudi District Census 2011
- Tiruchirappalli District
- Tiruchirappalli District Census 2011
- Thirunelveli District
- Tirunelveli District Census 2011
- Tirupupur District
- Tiruppur District Census 2011
- Thiruvallur District
- Thiruvallur District Census 2011
- Tiruvannamalai District
- Tiruvannamalai District Census 2011
- Tiruvarur District
- Thiruvarur District Census 2011
- Vellore District
- Vellore District : Census 2011
- Viluppuram District
- Viluppuram District Census 2011
- Virudhunagar District
- Virudhunagar District Census 2011