மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

மதுரை மாவட்டம்
மாவட்டம்

அமைவிடம் தமிழ்நாடு, இந்தியா
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாநகராட்சிகள்மதுரை மாநகராட்சி
தலைநகரம்மதுரை
அரசு
  ஆட்சியர்இந்திய ஆட்சிப் பணி
பரப்பளவு
  மொத்தம்3,741.73
மக்கள்தொகை (2011)[1]
  மொத்தம்30,41,038
  அடர்த்தி823
மொழிகள்
  ஆதிகாரப்பூர்வம்தமிழ்
  மற்றவைஆங்கிலம், உருது, தெலுங்கு, சௌராட்டிரம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் எண்625001
தொலைபேசிக் குறியீடு0452
வாகனப் பதிவுTN-58,TN-59,TN-64[2]
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
பெரிய நகரம்மதுரை
பாலின விகிதம்-50.5% / -49.5%
கல்வியறிவு81.5%
மக்களவை தொகுதி1
சட்டமன்றத் தொகுதி10

வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராசு மாகாணத்தில் இருந்த சில மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு நிர்வாக வசதிக்காக இது பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

மதுரை மாவட்டம் மதுரை, உசிலம்பட்டி, மேலூர் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 11 வருவாய் வட்டங்களாகவும், 51 உள்வட்டங்களாகவும், 665 வருவாய் கிராமங்களாகவும் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.[3]

வருவாய்க் கோட்டங்கள்

மதுரை மாவட்டம் மூன்று வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை;

  1. மதுரை
  2. உசிலம்பட்டி
  3. மேலூர்

வருவாய் வட்டங்கள்

மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக முகப்பு

இம்மாவட்டம் 11 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன

  1. மதுரை வடக்கு
  2. மதுரை தெற்கு
  3. மதுரை கிழக்கு
  4. மதுரை மேற்கு
  5. திருப்பரங்குன்றம்
  6. திருமங்கலம்
  7. பேரையூர்
  8. உசிலம்பட்டி
  9. வாடிப்பட்டி
  10. மேலூர்
  11. கள்ளிக்குடி

மக்கள்தொகை

இம்மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 30,41,038. இதில் 15,28,308 பேர் ஆண்கள் மற்றும் 15,12,730 பேர் பெண்கள்.

மொத்தம்ஆண்கள்பெண்கள்
மக்கள் தொகை30,41,038[4]15,28,30815,12,730
கல்வியறிவு8286.5576.74
0-6 வயதுடைய குழந்தைகள்2,87,1011,48,0501,39,051
மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு823

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 27,60,502 (90.86%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 1,68,881 (5.56%), கிருஸ்துவர்கள் 97,711 (3.22%), மதம் குறிப்பிடாதோர் 8,602 (0.28%), சமணர்கள் 1,532 (0.05%), சீக்கியர்கள் 520, புத்த மதத்தினர் 199, மற்றவர்கள் 305 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.[5]

உள்ளாட்சி & ஊராட்சி அமைப்புகள்

இம்மாவட்டம் மதுரை மாநகராட்சி தவிர, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள்[6], 13 ஊராட்சி ஒன்றியங்கள்[7], 420 ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் உள்ளது.[8]

மாநகராட்சிநகராட்சிபேரூராட்சிஊராட்சி ஒன்றியம்
  1. மதுரை
  1. திருமங்கலம்
  2. மேலூர்
  3. உசிலம்பட்டி
  1. ஏ. வெள்ளாளப்பட்டி
  2. அலங்காநல்லூர்
  3. சோழவந்தான்
  4. டி. கல்லுப்பட்டி
  5. எழுமலை
  6. வாடிப்பட்டி
  7. பேரையூர்
  8. பாலமேடு
  9. பரவை
  1. அலங்காநல்லூர்
  2. கள்ளிகுடி
  3. உசிலம்பட்டி
  4. கொட்டாம்பட்டி
  5. செல்லம்பட்டி
  6. சேடபட்டி
  7. திருப்பரங்குன்றம்
  8. திருமங்கலம்
  9. தே. கல்லுப்பட்டி
  10. மதுரை கிழக்கு
  11. மதுரை மேற்கு
  12. மேலூர்
  13. வாடிபட்டி

அரசியல்

மதுரை மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதியும்; பத்து சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.[9]

சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

மதுரை மற்றும் அதனைச் சுற்றி மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள சுற்றுலா, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஈர்ப்புகள்:

வழிபாட்டுத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

அருங்காட்சியகங்கள்

  1. காந்தி நினைவு அருங்காட்சியகம்
  2. சங்கத் தமிழ் காட்சிக் கூடம்
  3. அரசு அருங்காட்சியகம் (காந்தி நினைவு அருங்காட்சியகம்) வளாகம்

கல்வி மற்றும் ஆய்வு நிலையங்கள்

போக்குவரத்து

வானூர்தி நிலையம்

மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து துபாய், கொழும்பு வெளிநாட்டு நகரங்களுக்கும், மற்றும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பய் போன்ற இந்திய நகரங்களுக்கு நேரடி வானூர்திகள் உண்டு.

தொடருந்து

மதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை தொடருந்துகள் இருப்புப்பாதை வழியாக மதுரையை இணைக்கிறது.[10]

சாலைகள்

தே நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் நாட்டின் அனைத்து நகரங்கள் சாலைகள் வழியாக மதுரையை இணைக்கிறது.

மாவட்ட ஆட்சியர்கள்

வ.எண்நாள் முதல்நாள் வரைபெயர்குறிப்பு
001972ஆர். ஏ. சீத்தாராமதாஸ்[11]
001985இரா. வரதராஜூலு[12]
00ஆதிசேஷையா
00ஐயர்
002004 சூன் 2[13]டாக்டர் பி. சந்திரமோகன்
002004 சூன் 2[13]டி. இராசேந்திரன்
00?
002009 மே 28[14]பி. சீதாராமன்
002009 மே 27[15]?என். மதிவாணன்
002010 ஏப்ரல் 18 [16]தினேசு பொன்ராசு ஆலிவர்பொறுப்பு (மாவட்ட வருவாய் அலுவலர்)
002010 ஏப்ரல் 18 [16]2011 மார்ச்சு 21சி. காமராசு[17]
002011 மார்ச்சு 22[18]2012 மே 23[19]உ. சகாயம்
002012 மே 28[20]2013 சூன் 28 [21]அன்சுல் மிசுரா
002013 சூலை 7[22]2016 சனவரி 21 [23]இல. சுப்பிரமணியன்
002016 சனவரி 22 [23]2018 ஆகஸ்ட் 23 [24]கே. வீரராகவராவ்
002018 ஆகஸ்ட் 24 [25]2019 ஏப்ரல் 28 [26]எஸ்.நடராசன்
002019 ஏப்ரல் 28 [27]2019 சூன் 5[28]ச. நாகராஜன்
002019 சூன் 52019 சூலை 1சாந்தகுமார் [29]மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)[30]
002019 சூலை 1த. சு. ராஜசேகர் [31]

இதையும் காண்க

ஆதாரங்கள்

  1. "District Census 2011". Registrar General & Census Commissioner, India (2011). மூல முகவரியிலிருந்து 5 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-09-30.
  2. "Registration Series Allotted to Regional Transport Offices". Government of Tamil Nadu, State Transport Authority. மூல முகவரியிலிருந்து 12 September 2012 அன்று பரணிடப்பட்டது.
  3. Madurai District Revenue Administration
  4. http://www.census.tn.nic.in/whatsnew/fig_glance.pdf%7C தமிழக அரசின் மக்கள் தொகை குறித்த சிறு குறிப்பு.
  5. Madurai District : Census 2011 data பார்த்த நாள்: நவம்பர் 26, 2015.
  6. Local Bodies of Madurai District
  7. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
  8. Development Administration
  9. Elected Representatives of MADURAI DISTRICT
  10. http://indiarailinfo.com/arrivals/madurai-junction-mdu/790
  11. தமிழரசு;1972-03-16 பக்.96
  12. தமிழரசு 16-12-1985 பக்.34
  13. http://www.sify.com/legal/fullstory.php?id=13489351
  14. http://www.dinamani.com/tamilnadu/article614756.ece
  15. https://supremo.nic.in/ERSheetHtml.aspx?OffIDErhtml=4541&PageId=
  16. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/new-collector-of-madurai-takes-charge/article752589.ece
  17. http://www.dinamani.com/edition_madurai/article795495.ece
  18. http://www.dinamani.com/edition_madurai/article794234.ece
  19. http://www.dinamani.com/tamilnadu/article913080.ece
  20. http://news.chennaionline.com/chennai/Anshul-Mishra-assumes-office-as-Madurai-District-Collector/95c4374c-4192-468b-b228-25513f51a1aa.col
  21. https://supremo.nic.in/ERSheetHtml.aspx?OffIDErhtml=16852&PageId=
  22. http://timesofindia.indiatimes.com/city/madurai/L-Subramanian-takes-over-as-collector-of-Madurai-district/articleshow/20964273.cms
  23. http://www.dinamani.com/tamilnadu/2016/01/21/9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article3237154.ece
  24. https://tamil.thehindu.com/tamilnadu/article24762401.ece
  25. https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/24225410/Natarajan-takes-charge-as-new-collector-of-Madurai.vpf
  26. https://minnambalam.com/k/2019/06/06/11
  27. https://minnambalam.com/k/2019/06/06/11
  28. https://minnambalam.com/k/2019/06/06/11
  29. https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/04144953/1037981/Madurai-Collector-3-IAS-Officers-TN-Govt-Order.vpf%7C
  30. https://minnambalam.com/k/2019/06/06/11
  31. மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு, தினமணி, 2019சூலை2

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.