மதுரை மக்களவைத் தொகுதி

மதுரை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. மக்களவைத் தொகுதிகள் வரிசையில் 32வதாக இடம்பெறுகிறது.

மதுரை
மதுரை மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1952-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்சு. வெங்கடேசன்
கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,022,421 [1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (8 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்188. மேலூர்
189. மதுரை கிழக்கு
191. மதுரை வடக்கு
192. மதுரை தெற்கு
193. மதுரை மத்தி
194. மதுரை மேற்கு

தொகுதி மறு சீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பின் கீழ் மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம் விருதுநகர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.

இதுவரை மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள்

இத்தொகுதியில் காங்கிரசு கட்சி எட்டு முறை வென்றுள்ளது. சிபிஎம் 3 முறையும், சிபிஐ ஒரு முறையும் வென்றுள்ளன. இந்தத் தொகுதியில் இதுவரை திமுக, அதிமுக வென்றதில்லை.

இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களும் அவர்களது கட்சியும் -

14வது மக்களவை தேர்தல் முடிவு

பி. மோகன் - சிபிஎம் - 4,14,433

ஏ.கே. போசு - அதிமுக - 2,81,593

வெற்றி வேறுபாடு 1,32,840 வாக்குகள்

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

12 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் மு. க. அழகிரி சிபிஎம்மின் பி. மோகனை 1,40,985 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மு. க. அழகிரி திமுக 4,31,295
பி. மோகன் சிபிஎம் 2,90,310
கே. கவிஅரசு தேமுதிக 54,419
தர்பார் இராஜா பகுஜன் சமாஜ் கட்சி 3,752
எசு. வேல்துரை சுயேச்சை 4,712

16வது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.[3] இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கோபாலகிருஷ்ணன் அ.தி.மு.க 4,54,167
வ.வேலுச்சாமி தி.மு.க 2,56,731
சிவமுத்துகுமார் தே.மு.தி.க 1,47,300
பாரத் நாச்சியப்பன் காங் 32,143

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
77.48% 67.88% 9.60%

தேர்தல் முடிவு

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,16,026[6]

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[7] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
தவமணி பகுஜன் சமாஜ் கட்சி 2,659 0.26%
ராஜ்சத்யன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,07,680 30.28%
வெங்கடேசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 4,47,075 44% 1,39,395
அழகர் பி தேசிய மக்கள் சக்தி கட்சி 2,644 0.26%
அழகர் எம் மக்கள் நீதி மய்யம் 85,048 8.37%
பாண்டியம்மாள் நாம் தமிழர் கட்சி 42,901 4.22%
மயிலழகன் தமிழ்நாடு இளைஞர் கட்சி 955 0.09%

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. Rising discontent throws surprise result in second election
  3. "Bharathi Kannamma begins poll campaign". The Hindu Daily (01 ஏப்ரல் 2014). பார்த்த நாள் 01 ஏப்ரல் 2014.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  5. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
  6. "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 11 August 2019.
  7. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "". Tamil Nadu. Election Commission of India.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.