சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி (ஆங்கிலம்:Subramanian Swamy, பிறப்பு: செப்டம்பர் 15, 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும் பொருளியலாளரும் ஆவார். இவர் ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர். ஜனதா கட்சி, 2014 இந்திய மக்களவைத்தேர்தலுக்கு முன்பாக 2013இல் பாரதிய ஜனதா கட்சிவுடன் இணைந்துவிட்டது.[1] இந்திய மக்களைவை மற்றும் மாநிலங்களவைகளின் உறுப்பினராகவும் 1991ல், இந்திய நடுவண் அரசில் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் இந்திய அரசின் திட்டக் குழுவில் அங்கம் வகித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி | |
---|---|
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் | |
பதவியில் 1990–2013 | |
வணிக, தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 1990–1991 | |
பிரதமர் | சந்திரசேகர் |
சட்ட, நீதித்துறை அமைச்சர் (மேலதிக) | |
பதவியில் 1990–1991 | |
பிரதமர் | சந்திரசேகர் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1988–1994 | |
பதவியில் 1974–1976 | |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1998–1999 | |
பதவியில் 1977–1979 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1939 மயிலாப்பூர், சென்னை மாகாணம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2013-இன்று) |
பிற அரசியல் சார்புகள் |
ஜனதா கட்சி (1990-2013) |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரொக்சனா சுவாமி (தி. 1966–தற்காலம்) |
பிள்ளைகள் |
|
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்துக் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் (கணிதம்) இந்தியப் புள்ளியியல் கழகம் (முதுகலை, புள்ளியியல்) ஹார்வர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
தொழில் | பொருளாதார நிபுணர் பேராசிரியர் எழுத்தாளர் அரசியல்வாதி |
சமயம் | இந்து |
இணையம் | அதிகாரபூர்வ இணையதளம் |
தனி வாழ்க்கை
இவர் சென்னையின் மைலாப்பூர் பகுதியில் பிறந்தார். 1966ஆம் ஆண்டு ரோக்சனா என்பரை திருமணம் புரிந்தார்.[2] கணிதத்தில் முனைவர் பெற்ற ரோக்சனா தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார்.[3][4] இவருக்கு கீதாஞ்சலி சுவாமி, சுகாசினி ஹைதர் என்று இரு மகள்கள் உள்ளனர். கீதாஞ்சலி அமெரிக்காவில் எம்.ஐ.டி. யில் பேராசியராக உள்ள சஞ்சய் சர்மா என்பவரை திருமணம் செய்து உள்ளார். சுகாசினி ஹைதர் இந்து நாளேட்டில் செய்தியாளராக பணிபுரிந்தார்.[5] இவர் 1997இல் வெளியுறவுச் செயலாளராக இருந்த சல்மான் ஹைதர் என்பவரின் மகன் நதீம் ஹைதரை திருமணம் செய்துள்ளார்.[6][7][8]
அரசியல் வாழ்க்கை
சுவாமி ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இந்தியாவிலுள்ள டிஎன்எ என்ற இதழுக்கு முசுலிம்கள் பற்றி எழுதிய சர்ச்சைக்குரிய கருத்தால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கோடை கால பொருளாதார வகுப்பு எடுப்பதில் இருந்து நீக்கப்பட்டார்.[9]
புத்தகங்கள்
சுவாமி பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
அவரது சில புத்தகங்கள்:
- Economic Growth in China and India (1989)
- The Assassination of Rajiv Gandhi: unanswered questions and unasked queries (2000)
- Hindus Under Siege (2006)
- Corruption and Corporate Goverance in India: Satyam, Spectrum, and Sundaram (2009)
- Economic Development and Reforms in India and China (2010)
சான்றடைவு
- "Subramanian Swamy's Janata Party merges with BJP". economictimes. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2014.
- Elizabeth Roche (8 February 2013). "Perfect co-petitioners". Livemint.
- http://www.indianexpress.com/news/for-sc-entry-card-swamy-becomes-wife-s--clerk-/642624/
- http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4118741
- "Blogs". The Hindu. பார்த்த நாள் August 16, 2014.
- "Rediff on the NeT: Political gossip from Delhi". Rediff.com.
- "The Outlier | The Caravan – A Journal of Politics and Culture". Caravanmagazine.in.
- "The Kohli-Pai juggernaut". Mid-day.com (23 April 2012).
- "Fired Harvard professor lashes back at critics". masslive. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2014.