ஆர்வர்டு பல்கலைக்கழகம்

ஹார்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University) ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். ஜான் ஹார்வர்டு என்னும் மதகுரு ஒருவரால் 1639 ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சார்லஸ் இலியாட் இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லுரியாக உருவாக்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம் தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, மற்றும் பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாக விளங்குகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகம்
Harvard University

நிறுவல்:செப்டம்பர் 8, 1636(பழைய), செப்டம்பர் 18, 1636 (புதிய)
வகை:தனியார்
நிதி உதவி:$34.9 பில்லியன்
அதிபர்:டுரு கில்பின் பாஸ்டு
ஆசிரியர்கள்:2,497 (மருத்துவம் சாராத), 10,674 (மருத்துவ)
இளநிலை மாணவர்:6,715
முதுநிலை மாணவர்:12,424
அமைவிடம்: காம்பிரிட்ஜு, மசாசுசெட்ஸ், அமெரிக்கா
வளாகம்:நகர், 380 ஏக்கர்/154 ha
இணையத்தளம்:harvard.edu

2007 கணக்கின் படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (34.9 பில்லியன் அமெரிக்க டாலர்) பெறும் கல்லூரிகளில் ஹார்வர்டு முதல் இடம் வகிக்கிறது. இப் பல்கலைக்கழகத்தின் சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் துறை தமிழ்மொழி வகுப்புக்களை வழங்குகிறது.[1]

மேற்கோள்கள்

  1. துறை, வகுப்புகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.