தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதியாகும். இந்தத் தொகுதியில் 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1952-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்எஸ். எஸ். பழனிமாணிக்கம்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,054,118 [1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு & திமுக (7 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்167. மன்னார்குடி
173. திருவையாறு
174. தஞ்சாவூர்
175. ஒரத்தநாடு
176. பட்டுக்கோட்டை
177. பேராவூரணி

தொகுதி மறுசீரமைப்பு

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றன. அதே போன்று நாகை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளாகும்.

மக்களவை உறுப்பினர்கள்

இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் பழனிமாணிக்கம் மதிமுகவின் துரை பாலகிருட்டிணனை 101,787 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பழனிமாணிக்கம் திமுக 4,08,343
துரை பாலகிருட்டினன் மதிமுக 3,06,556
பி. இராமநாதன் தேமுதிக 63,852
எசு. சரவணன் பகுஜன் சமாஜ் கட்சி 5,811
முருகராஜ் சுயேச்சை 9,805

16வது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கு. பரசுராமன் அதிமுக 5,10,307
த. ரா. பாலு திமுக 3,66,188
கருப்பு முருகானந்தம் பா.ஜ.க 58,521
கிருஷ்ணசாமி வாண்டையார் காங் 30,232

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] வித்தியாசம்
76.63% 75.49% 1.14%

தேர்தல் முடிவு

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் மொத்தம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வேட்பாளர் கட்சி சார்பாகவும் வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்[4] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை

வாக்குப்பதிவு

2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  3. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  4. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "". Tamil Nadu. Election Commission of India.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.