சிதம்பரம் மக்களவைத் தொகுதி
சிதம்பரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 27வது தொகுதி ஆகும்.
![]() சிதம்பரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1957-நடப்பு |
---|---|
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
தற்போதைய மக்களவை உறுப்பினர் | தொல். திருமாவளவன் |
கட்சி | விசிக |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,59,735[1] |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (5 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 148. குன்னம் 149. அரியலூர் 150. ஜெயங்கொண்டான் 157. புவனகிரி 158. சிதம்பரம் 159. காட்டுமன்னார்கோயில் (SC) |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு முன், சிதம்பரத்தில் இருந்த சட்டசபைத் தொகுதிகள் - குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி).மறுசீரமைப்புக்குப்பின் குன்னம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர்கள்
சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒரு முறை வென்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1957 | ஆர். கனகசபை பிள்ளை (அரசியல்வாதி) | காங்கிரசு |
1957 | இளையபெருமாள் | காங்கிரசு |
1962 | ஆர். கனகசபை பிள்ளை (அரசியல்வாதி) | காங்கிரசு |
1967 | வி. மாயவன் | திமுக |
1971 | வி. மாயவன் | திமுக |
1977 | முருகேசன் | அதிமுக |
1980 | பி. குழந்தைவேலு | திமுக |
1984 | பி. வள்ளல்பெருமான் | காங்கிரசு |
1989 | பி. வள்ளல்பெருமான் | காங்கிரசு |
1991 - | பி. வள்ளல்பெருமான் | காங்கிரசு |
1996 | வி. கணேசன் | திமுக |
1998 | ஆர். ஏழுமலை @ தலித் எழில்மலை | பாமக |
1999 | இ. பொன்னுசாமி | பாமக |
2004 | இ. பொன்னுசாமி | பாமக |
2009 | தொல். திருமாவளவன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி |
2014 | எம். சந்திரகாசி | அதிமுக |
2019 | தொல். திருமாவளவன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி |
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் பாமகவின் எ. பொன்னுச்சாமியை 99,083 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
தொல். திருமாவளவன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 4,28,804 |
எ. பொன்னுச்சாமி | பாமக | 3,29,721 |
எசு. சசிகுமார் | தேமுதிக | 66,283 |
என். ஆர். இராஜேந்திரன் | பகுஜன் சமாஜ் கட்சி | 5,718 |
வி. மணிகண்டன் | சுயேச்சை | 9,799 |
வி. மருதமுத்து | சுயேச்சை | 8,367 |
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
மா. சந்திரகாசி | அதிமுக | 4,29,536 |
தொல். திருமாவளவன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 3,01,041 |
சுதா | பா.ம.க. | 2,79,016 |
வள்ளல் பெருமான் | காங். | 28,988 |
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
77.30% | 79.61% | ↑ 2.31% |
தேர்தல் முடிவு
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | %புவனகிரி தொகுதியில் |
---|---|---|---|---|---|
11,53,192 |
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[4] | கட்சி | பெற்ற வாக்குகள்vck | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
தொல். திருமாவளவன் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 5,00,229 | 43.38% | 3,219 | |
![]() |
சந்திர சேகர் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 4,97,010 | 43.10% | |
கிருஷ்ண ராஜ் | அனைத்து மக்கள் புரட்சி கட்சி | 4,675 | 0.41% | ||
![]() |
சிவஜோதி | நாம் தமிழர் கட்சி | 37,471 | 3.25% | |
பார்வதி | தேசிய மக்கள் சக்தி கட்சி | 4,100 | 0.36% | ||
![]() |
ரவி | மக்கள் நீதி மய்யம் | 15,334 | 1.33% |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
- "List of CANDIDATE OF CHIDAMBARAM Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 12/05/2019.
வெளியிணைப்புகள்
- Contest turns dicey in Chidambaram 2014 மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு செய்திக் கட்டுரை (முன்னோட்டம்)
- AIADMK scripts a comeback in Chidambaram 2014 மக்களவைத் தேர்தல் முடிவு குறித்த ஒரு செய்திக் கட்டுரை
சிதம்பரம்