பாட்டாளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சி (பா. ம. க.) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1989களில், டாக்டர். ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கினார். இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
பாட்டாளி மக்கள் கட்சி | |
---|---|
![]() | |
தலைவர் | கோ.க.மணி |
நிறுவனர் | மருத்துவர் ச. இராமதாசு |
தொடக்கம் | 16 சூலை 1989 |
தலைமையகம் | தைலாபுரம், திண்டிவனம், விழுப்புரம், தமிழ்நாடு |
கொள்கை | சமூகநீதி, சனநாயகம், சமத்துவம், மனித நேயம் |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
கூட்டணி | தேசிய ஜனநாயக கூட்டணி (1998-2004) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2004-2009) மூன்றாவது அணி (2009-2010) |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
www.anbumani4cm.com |
சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது.[1] 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.
சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை(மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.[2][3]
தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[4][5] ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.
சின்னம்
இக்கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது.[6] பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.
1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.[7] அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
முக்கியத் தலைவர்கள்
- ச. இராமதாசு - பாமக நிறுவனர்
- கோ. க. மணி - பாமக மாநில தலைவர்
- அன்புமணி ராமதாஸ் - முன்னாள் சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சர் மற்றும் பாமக மாநில இளைஞர் அணித்தலைவர்
- என். டி. சண்முகம் - முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர்
- ஏ. கே. மூர்த்தி - பாமக துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர்
- அர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர்
- வடிவேல் இராவணன் - பாமக மாநில பொதுச்செயலாளர்
- வழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர்
- திலகபாமா - பாமக மாநில பொருளாளர்
வாக்குகள், தொகுதிகள்
தமிழ்நாடு
வருடம் | பொதுத் தேர்தல் | கூட்டணி | கிடைத்த வாக்குகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
1989 | 9வது மக்களவை | 15,36,350 | 0 | ||
1991 | 10வது சட்டசபை | 14,52,982 | 1 | ||
1991 | 10வது மக்களவை | 12,69,690 | 0 | ||
1996 | 11வது சட்டசபை | 10,42,333 | 4 | ||
1996 | 11வது மக்களவை | 5,52,118 | 0 | ||
1998 | 12வது மக்களவை | 15,48,976 | 4 | ||
1999 | 13வது மக்களவை | 22,36,821 | 5 | ||
2001 | 12வது சட்டசபை | 15,57,500 | 20 | ||
2004 | 14வது மக்களவை | 19,27,367 | 6 | ||
2006 | 13வது சட்டசபை | 18,63,749 | 18 | ||
2009 | 15வது மக்களவை | 19,44,619 | 0 | ||
2011 | 14வது சட்டசபை | 19,27,783 | 3 | 5.23 % | |
2016 | 15வது சட்டசபை | 23,00,775 | 0 | 5.3 % |
புதுச்சேரி
வருடம் | பொதுத் தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் |
---|---|---|---|
1989 | 9வது மக்களவை | 25,021 | 0 |
1991 | 8வது சட்டசபை | 11,402 | 0 |
1991 | 10வது மக்களவை | 13,375 | 0 |
1996 | 9வது சட்டசபை | 11,544 | 1 |
1996 | 11வது மக்களவை | 19,792 | 0 |
1999 | 13வது மக்களவை | 1,40,920 | 0 |
2001 | 10வது சட்டசபை | 36,788 | 0 |
2004 | 14வது மக்களவை | 2,41,653 | 1 |
2006 | 11வது சட்டசபை | 23,426 | 2 |
2009 | 15வது மக்களவை | 2,08,619 | 0 |
மாநிலங்களவை உறுப்பினர்கள்
வ.எண் | பெயர் | பதவி | ஆண்டு |
---|---|---|---|
1 | அன்புமணி ராமதாஸ் | மாநிலங்களவை உறுப்பினர் | 2004 - 2010 |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் | 2004 - 2009 | ||
2 | மாநிலங்களவை உறுப்பினர் | 2019 - தற்போது வரை |
மேற்கோள்கள்
- http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+swings+AIADMK+way&artid=HtcJD1dO7X4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=
- http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf
- "தமிழகத்தில் மதிமுக-புதுச்சேரியில் பாமக கட்சி அங்கீகாரம் ரத்து!". பார்த்த நாள் 10 March 2018.
- "பாமக போட்டியிடும் தொகுதிகள்-ஜெ அறிவிப்பு!". பார்த்த நாள் 10 March 2018.
- "Parliament Elections 2009 - PMK Candidates, நாடாளுமன்றத் தேர்தல் 2009 - பாமக வேட்பாளர்கள் பயோடேட்டா". thatstamil.oneindia.in. பார்த்த நாள் 10 March 2018.
- "BSP gets recognition as national party". ரி டிப். பார்த்த நாள் 28 மார்ச் 2016.
- "PMK allotted ‘mango’ symbol for 2016 polls". த இந்து. பார்த்த நாள் 28 மார்ச் 2016.