இந்திய அரசியல் கட்சிகள்
இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. 2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]
கட்சிகளின் வகைப்பாடு
இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிகளை கீழ்க்காணும் வகைகளில் பிரித்துள்ளன. அவை;
- தேசியக் கட்சிகள்
- மாநிலக் கட்சிகள்
- பதிவு செய்யப்பட்ட கட்சிகள்
தேசியக் கட்சிகள்
தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2]
வ.எண். | கட்சிப் பெயர் | சுருக்கப் பெயர் | கொடி | சின்னம் | ஆண்டு | தலைவர் |
---|---|---|---|---|---|---|
1 | பகுஜன் சமாஜ் கட்சி | பி.எஸ்.பி | ![]() | 1984 | மாயாவதி | |
2 | பாரதீய ஜனதா கட்சி | பா.ஜ.க | ![]() | 1980 | அமித் ஷா | |
3 | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | சி.பி.ஐ | ![]() | 1925 | சுராவரம் சுதாகர் ரெட்டி | |
4 | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | சி.பி.ஐ (எம்) | ![]() | 1964 | சீத்தாராம் யெச்சூரி | |
5 | இந்திய தேசிய காங்கிரஸ் | ஐ.என்.சி | ![]() | 1885 | ராகுல் காந்தி | |
6 | ஐக்கிய ஜனதா தளம் | ஜே.டி.யு | ![]() | 1999 | நிதிஷ் குமார் | |
7 | சமாஜ்வாதி கட்சி | எஸ்.பி | 1992 | முலாயம் சிங் யாதவ் |
மாநிலக் கட்சிகள்
மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற, சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியிலோ, 2 சட்டப்பேரவை தொகுதிகளிலோ வெல்ல வேண்டும். அல்லது, 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2][3]
பதிவு செய்த கட்சிகள்
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.அவை
1. அனைத்து மக்கள் அரசியல் கட்சி
மேற்கோள்கள்
- க.சக்திவேல் (2018 சூலை 15). "நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான கட்சிகள்; 9 ஆண்டுகளில் இரு மடங்கான கட்சிகள் எண்ணிக்கை: விதிகளை மீறினால் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் கிடைக்குமா?". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 சூலை 2018.
- http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/ElecSym19012013_eng.pdf
- http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/AmendmentNotificationEng09042013.pdf