இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத்.

Indian Union Muslim League (IUML)
இந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவு
தலைவர்கே. எம். காதர் மொகிதீன்
நிறுவனர்நவாப் சலீம் முல்லாகான்
பொதுச்செயலாளர்குஞ்சாலி குட்டி
மக்களவைத் தலைவர்இ.டி.முகமது பசீர்
தொடக்கம்10 மார்ச்சு 1948 (1948-03-10)
தலைமையகம்மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை.
செய்தி ஏடுமணிச்சுடர்,Times of league
இளைஞர் அமைப்புமுசுலிம் இளையோர் லீக்
பெண்கள் அமைப்புமுசுலிம் பெண்கள் லீக்
அரசியல் நிலைப்பாடுவலது
இ.தே.ஆ நிலைமாநில கட்சி [1]
கூட்டணிஐக்கிய ஜனநாயக முன்னணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
3 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
19 / 374
(கேரளா - (18 )&தமிழ்நாடு -(1 ))
தேர்தல் சின்னம்
- ஏணி
இணையதளம்
indianunionmuslimleague.in

சுதந்திர இந்தியாவில்

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கிவிட்டு 1949-ல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.

தலைவர்கள்

காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா, முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ. அகமது ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் அகில இந்தியத் தலைவராக உள்ளார்.[2][3]

தமிழகத்தில் அப்துல்சமது, அப்துல் லத்தீப், கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் தமிழக தலைவராக பணியாற்றினர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம்,பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.[4] இதில் கடையநல்லூரில் முகமது அபுபக்கர் வெற்றிபெற்று இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
5 1 313808 0.7 % .[6]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

2016,கேரளா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது.இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
24 18 1496864 7.4 % .[7]

ஆதாரம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.