தமிழ்த் தேசியக் கட்சி

தமிழ்த் தேசியக் கட்சி 1962-64 காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது 1962ல் ஈ. வெ. கி. சம்பத்தால் தொடங்கப்பட்டது. சம்பத் திராவிடர் கழகத் (திக) தலைவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகனாவார். 1949ல் கா. ந. அண்ணாதுரை தி.க.விலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) தொடங்கிய போது, சம்பத் அவருடன் இணைந்து கொண்டார். அடுத்த பன்னிரெண்டாண்டுகள் திமுகவின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். பின்னர் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைப் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவிலிருந்து பிரிந்து சென்றார். 1961 ஏப்ரல் 19 ஆம் நாள் தமிழ்த் தேசியக் கட்சி என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.[1] கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். 1962 சட்டமன்றத் தேர்தலில் போடியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது. போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோல்வியடைந்தது. 1964ல் சம்பத் தன் கட்சியை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[2][3][4][5]

மேற்கோள்கள்

  1. சொல்லின் செல்வரின் வாழ்கைக் குறிப்பு (2009). சம்பத் பேசுகிறேன். சென்னை: வேலா வெளியீடு. பக். 17-18.
  2. Sampath, Iniyan. "Famil background". பார்த்த நாள் 2008-01-20.
  3. Kumar, Vinoj (2004-06-08). "Priest-less weddings in TN VIP families". Sify News. http://sify.com/news/politics/fullstory.php?id=13493522. பார்த்த நாள்: 2009-01-20.
  4. Hardgrave, Robert. L (1979). Essays in the Political Sociology of South India. Usha, 1979 (Originally published by University of Michigan. பக். 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8173040528. http://books.google.com/books?id=a6IsAAAAMAAJ&pgis=1.
  5. Jayakanthan, Dandapani (2006). A Literary Man's Political Experiences. Read Books. பக். 111–113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781406735697. http://books.google.com/books?id=Lnl_um7uFcsC.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.