ஐக்கிய ஜனநாயக முன்னணி (இந்தியா)

ஐக்கிய ஜனநாயக முன்னணி (United Democratic Front-UDF) இந்தியாவின் கேரள மாநிலத்தில் செயற்பட்டு வரும் ஒரு அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். 1970 களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான கே. கருணாகரனால் இக் கூட்டணி உருவாக்கப்பட்டது.[1] கேரளாவின் மற்றொரு அரசியல் கூட்டணியான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கெதிரான பலமானதொருக் கூட்டணியாக உள்ளது. கேரளாவில் இக் கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கி வருகிறது.

கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2011

2011 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்று, 2016 வரை கேரள மாநிலத்தை ஆட்சி செய்தது. இத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 72 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 68 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன. மிகக் குறைவான பெரும்பான்மை பெற்று ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி உம்மன் சாண்டி தலைமையில் ஆட்சி அமைத்தது. [2]

சட்டப்பேரவையில்-இக்கூட்டணிக் கட்சிகள்

  1. இந்திய தேசிய காங்கிரசு
  2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
  3. கேரள காங்கிரஸ் (எம்)
  4. சோசியலிஸ்ட் ஜனதா கட்சி
  5. கேரள காங்கிரஸ் (பி)
  6. கேரள காங்கிரஸ் (ஜே)
  7. கேரள புரட்சிகர சோசியலிசக் கட்சி (பேபி ஜான்)
  8. புரட்சிகர சோசியலிசக் கட்சி
  9. கம்யூனிஸ்ட் மார்க்சிசக் கட்சி (CMP)

கேரள சட்டப் பேரவைத் தேர்தல், 2016

2016 இல் நடைபெற்ற கேரள மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 47 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியும், 91 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கூட்டணியும் வெற்றி பெற்றன.இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆடசியை கைப்பற்றியது.

இணையதளம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.