அர. வேலு
ரங்கசாமி வேலு (பிறப்பு: சூலை 26, 1940) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சியின் உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இரயில்வே அமைச்சராகப் பணியாற்றியவர்.
ரங்கசாமி வேலு | |
---|---|
முன்னாள் இரயில்வே அமைச்சர் | |
பதவியில் 2004-2009 | |
பின்வந்தவர் | கே. எச். முனியப்பா |
தொகுதி | அரக்கோணம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 26 சூலை 1940 திருவண்ணாமலை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | பாமக |
வாழ்க்கை துணைவர்(கள்) | மல்லிகா |
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்தார்; தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவர் மாவட்ட ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாக கூட்டு ஆணையராகவும், வருவாய் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்தார்.[2]
மேற்கோள்கள்
- "Fourteenth Lok Sabha Members Bioprofile". Parliament of India. பார்த்த நாள் 30-03-2016.
- "Celebrity Photo Gallery, Celebrity Wallpapers, Celebrity Videos, Bio, News, Songs, Movies".
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.