திருப்பரங்குன்றம் வட்டம்

திருப்பரங்குன்றம் வட்டம், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள் மதுரை தெற்கு வட்டத்தை சீரமைத்து, திருநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, 12 பிப்ரவரி 2014 புதன் கிழமை அன்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சென்னையிலிருந்து காணோலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.[1] இவ்வட்டத்தில் மதுரை மாநகராட்சியின் திருப்பரங்குன்றம், திருநகர், நிலையூர், அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், மாடக்குளம் போன்ற பகுதிகள் அடங்கியுள்ளது. [2]இவ்வட்டடத்தில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம், திருநகரிலிருந்து தனக்கன்குளம் செல்லும் பாதையில் உச்சிக்கருப்பணசாமி கோவில் அருகே மொட்டமலையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 6,340 சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.[3]

உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்

திருப்பரங்குன்றம் வருவாய் வட்டம் இரண்டு உள்வட்டங்களையும், 27 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[4]

சட்டமன்றத் தொகுதி

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில்[5] 123 வாக்குச் சாவடிகள் உள்ளது. [6]

மேற்கோள்கள்

  1. 23 new taluks created in Tamil Nadu
  2. மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்
  3. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
  4. திருப்பரகுன்றத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
  5. 195 - திருப்பரங்குன்றம்
  6. திருப்பரங்குன்றம் தாலுகாவில் வாக்காளர் பெயர் சேர்க்க 986 பேர் மனு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.