சோழவந்தான்

சோழவந்தான் (Cholavandan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். 15.24 சகிமீ பரப்பு கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளும், 23,872 மக்கள்தொகையும் கொண்டது. சோழவந்தான் பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

சோழவந்தான்
சோழவந்தான்
இருப்பிடம்: சோழவந்தான்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°01′22″N 77°57′48″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் T. G. வினய், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

23,872 (2011)

1,566/km2 (4,056/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15.24 சதுர கிலோமீட்டர்கள் (5.88 sq mi)

127 மீட்டர்கள் (417 ft)

இணையதளம் www.townpanchayat.in/sholavandan

பொருளாதாரம

இது வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன இங்கு பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன.

பெயர் வரலாறு

இந்த ஊர் சனகபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலும் சனகை மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாண்டிய நாட்டில் இருந்த இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்கிறது என வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10.022716°N 77.963426°E / 10.022716; 77.963426 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,578 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11,168 ஆண்கள், 11,410 பெண்கள் ஆவார்கள். சோழவந்தானில் 1000 ஆண்களுக்கு 1022 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகமானது. சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 82.41% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88.98%, பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 2,213 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1030 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு மிக அதிகமானதாக உள்ளது.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 93.54% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 4.53% கிருஸ்துவர்கள் 1.64%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சோழவந்தான் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 14.84%, பழங்குடியினர் 0.08% ஆக உள்ளனர். சோழவந்தானில் 5,936 வீடுகள் உள்ளன.[6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. சோழவந்தான் பேரூராட்சி
  5. "Cholavandan". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் பெப்ரவரி 6, 2007.
  6. Sholavandan Population Census 2011 பார்த்த நாள்: டிசம்பர் 21, 2015

வெளி இணைப்பு

விக்கி மேப்பியாவில் சோழவந்தான் அமைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.