லேடி டோக் கல்லூரி

லேடி டோக் கல்லூரி அல்லது டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்நாட்டில் மதுரை நகரில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். அமெரிக்க கிருஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த கேத்தி வில்காக்ஸ் என்ற பெண்மணியால் 1948 ஆம் ஆண்டு தல்லாகுளம் அருகே தொடங்கப்பட்டது. மதுரை மில் உரிமையாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சர்.டோக் மற்றும் லேடி டோக் இருவரது உதவியையும் கேத்திவில்காக்ஸ் அம்மையார் பெற்று இக்கல்லூரியை தொடங்கினார். கல்லூரி தொடங்க பெரும் உதவி செய்த டோக் பெருமாட்டி பெயராலேயே இக்கல்லூரி அழைக்கப்படுகிறது [1]. 1978 ஆம் ஆண்டு சுயாட்சி அந்தஸ்தை பெற்றது. தற்போது கேத்தி வில்காக்ஸ் கல்வி கூட்டமைப்பின் அங்கமாக இயங்கி வருகிறது.

81 மாணவிகள் கொஞ்சம் நூல்கள் அடங்கிய சிறிய நூலகம், ஒரு விடுதியுடன் தொடங்கிய இந்தக் கல்லூரி இன்று 5048 மாணவிகள், 255 ஆசிரியைகள், 170 ஆசிரியரல்லாத அலுவலர்களையும் கொண்டு வளர்ந்துள்ளது. 26 இளங்கலை படிப்புகள், 15 முதுகலைப் படிப்புகள், 9 எம்.பில். படிப்புகள், 3 முதுகலை பட்டய படிப்புகள், 2 பட்டய படிப்புகள் மற்றும் 1 சான்றிதழ் படிப்புகளையும் கொண்டுள்ளது.[2] இக்கல்லூரி ஜே.எக்ஸ்.மில்லர் நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளதாக கல்லூரி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய மாணவர்

  • சாலினி இளந்திரையன், முதல்வர் - தமிழ்ப் பேராசிரியர், திருவேங்கடவன் கல்லூரி, புதுதில்லி.
  • முனைவர். மெர்ஸி புஷ்பலதா - முன்னாள் கல்லூரி முதல்வர்

மேற்கோள்கள்

1.எனது மதுரை நினைவுகள் - மனோகர் தேவதாஸ்

2. டோக்பெருமாட்டி கல்லூரி கையேடு 2015 - 2016

வெளி இணைப்புகள்

  1. [1]
  2. [2]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.