திருப்பூர்

திருப்பூர் (Tiruppur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, திருப்பூர் மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது 27.19 சகிமீ பரப்பளவு கொண்டது.[5] இம்மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது.

திருப்பூர்
மாநகராட்சி
அடைபெயர்(கள்): இந்தியாவின் பின்னலாடை நகரம், ஜவுளி நகரம், பனியன் நகரம்
திருப்பூர்
திருப்பூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 11.11°N 77.34°E / 11.11; 77.34
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்திருப்பூர்
அரசு
  வகைமாநகராட்சி
  Bodyதிருப்பூர் மாநகராட்சி
  மக்களவை உறுப்பினர்கே. சுப்பராயன்
  சட்டமன்ற உறுப்பினர்க. நா. விஜயகுமார் (திருப்பூர் வடக்கு)
சு. குணசேகரன் (திருப்பூர் தெற்கு)
  மாநகர முதல்வர்காலியிடம்
  மாவட்ட ஆட்சியர்திரு. டாக்டர். க. விஜய கார்த்திகேயன், இ. ஆ. ப.
பரப்பளவு[1]
  மாநகராட்சி159.6
பரப்பளவு தரவரிசை6
மக்கள்தொகை (2011)[2]
  மாநகராட்சி4,44,352[3]
  தரவரிசை5
  பெருநகர்[4]9,63,173
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு6416xx
தொலைபேசி குறியீடு+91-421
வாகனப் பதிவுTN-39, TN-42
சென்னையிலிருந்து தொலைவு460 கி.மீ (286 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு175 கி.மீ (109 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு194 கி.மீ (120 மைல்)
கோவையிலிருந்து தொலைவு54 கி.மீ (33 மைல்)
இணையதளம்tiruppur.tn.nic.in

தமிழகத்தில் ஆறாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்று. திருப்பூர் மாநகராட்சியுடன் வேலம்பாளையம், எஸ்.நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட சாலைகள் விளங்குகின்றன.

சொற்பிறப்பு

திருப்பூர் என்ற பெயர் மகாபாரத காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. புராணக்கதைகளின்படி, பாண்டவர்களின் கால்நடைகள் திருடர்களால் திருடப்பட்டன, பின்னர் அர்ஜுனனின் படைகளால் அது மீண்டும் இவ்வூரிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதனால் இதற்கு திருப்பூர் (திருப்பு: திரும்பவும் மற்றும் ஊர்: தமிழில் இடம்) என்று பெயர் வந்தது. அதாவது திருப்பித் தரப்பட்ட இடம் என்று பொருள்.[6] திருப்பையூர் என்பது இதன் பழைய பெயரெனக் கருதப்படுகிறது.[7]

வரலாறு

திருப்பூர் ஆனது சங்க காலத்தில் சேரர்களால் ஆளப்பட்ட கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இப்பகுதி இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும், ஒரு முக்கிய ரோமானிய வர்த்தக பாதையின் ஒரு பகுதியாக இருந்தது.[8][9][10] கி.பி 10 ஆம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர்.

பின்னர் இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் பாளையக்காரர்கள், மதுரை நாயக்கர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர்.[11] பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மதுரை நாயக்கர்களுடன் தொடர்ச்சியான போர்களைத் தொடர்ந்து, இப்பகுதி மைசூர் இராச்சியத்தின் கீழ் வந்தது. ஆங்கிலோ-மைசூர் போர்களில், திப்பு சுல்தானின் தோல்விக்குப் பின்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1799இல், இப்பகுதியை சென்னை மாகாணத்துடன் இணைத்தது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.1075°N 77.3398°E / 11.1075; 77.3398 ஆகும்.[12] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 295 மீட்டர் (968 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
 
86.05%
முஸ்லிம்கள்
 
10.36%
கிறிஸ்தவர்கள்
 
3.33%
மற்றவை
 
0.26%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகை 444352 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 227,311, பெண்கள் 217,041 ஆகவுள்ளனர். இம்மாநகரத்தின் எழுத்தறிவு 87.81% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 969 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.05%, இசுலாமியர்கள் 10.36%, கிறித்தவர்கள் 3.33% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[15]

2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 473,637 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 9,63,173 ஆகவும் உள்ளது.

திருப்பூரின் சிறப்பு

திருப்பூருக்கு மேலும் சிறப்பு - விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் வாழ்ந்த மண் என்பதே ஆகும்.

திருப்பூரின் தொழில் வளம்

தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உற்பத்திச் செய்கிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர்.

அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம், கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது.

திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

மாநகராட்சி அதிகாரிகள்
மாநகர முதல்வர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர்க. நா. விஜயகுமார் (திருப்பூர் வடக்கு)
சட்டமன்ற உறுப்பினர்சு. குணசேகரன் (திருப்பூர் தெற்கு)
மக்களவை உறுப்பினர்கே. சுப்பராயன்

திருப்பூர் மாநகரமானது, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், க. நா. விஜயகுமார் என்பவர் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியிலிருந்தும் மற்றும் சு. குணசேகரன் என்பவர் அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த கே. சுப்பராயன் வென்றார்.

போக்குவரத்து

திருப்பூரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் பின்வருமாறு:

இங்கிருந்து கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நகரத்தில் இரண்டு பெரிய பேருந்து நிலையங்களான, பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளன.

இந்நகரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது முழுமையாக மின்மயமாக்கப்பட்ட வழிதடங்கள் ஆகும். இந்த இரயில் நிலையமானது ஈரோடு - கோயம்புத்தூரை நன்கு இணைக்கின்றது.

இந்நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கோயம்புத்தூர் வானூர்தி நிலையம், அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்

திருப்பூரின் சுற்றுலாத் தலங்கள்

திருப்பூரில் உள்ள இறை வழிபாடு தலங்கள்

திருப்பூர் ஆறுகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "About Corporation of Tirupur". Corporation of Tirupur.
  2. "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (pdf). Office of the Registrar General & Census Commissioner, India. மூல முகவரியிலிருந்து 7 May 2012 அன்று பரணிடப்பட்டது.
  3. "Tiruppur population".
  4. "Primary Census Abstract - Urban Agglomeration" (XLS). Registrar General and Census Commissioner of India. மூல முகவரியிலிருந்து 15 March 2016 அன்று பரணிடப்பட்டது.
  5. http://tiruppurcorp.tn.gov.in/index.html
  6. "HISTORY OF TIRUPPUR DISTRICT".
  7. "திருப்பையூர்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2440221. பார்த்த நாள்: 29 December 2019.
  8. "Roman connection in Tamil Nadu".
  9. "Kovai’s Roman connection". தி இந்து. 8 January 2009. http://www.hindu.com/mp/2009/01/08/stories/2009010850970100.htm. பார்த்த நாள்: 9 June 2010.
  10. "On the Roman Trail". தி இந்து. 21 January 2008. http://www.hindu.com/mp/2008/01/21/stories/2008012150370500.htm. பார்த்த நாள்: 9 June 2010.
  11. "The land called Kongunadu". The Hindu. 19 November 2005. http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm. பார்த்த நாள்: 9 June 2010.
  12. "Falling Rain Genomics, Inc - Tiruppur". Fallingrain.com. மூல முகவரியிலிருந்து 15 April 2010 அன்று பரணிடப்பட்டது.
  13. Census of India,series 1,Primary Census Abstract,General Population Part B(i),pp.435;census of India 1991. Government of India. 2001.
  14. "TamilNadu Towns, Page 22". census India (2011). மூல முகவரியிலிருந்து 29 September 2011 அன்று பரணிடப்பட்டது.
  15. திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.