திண்டுக்கல் மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திண்டுக்கல்மாவட்ட மாநகராட்சியாகும்.மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.[4][5]

திண்டுக்கல்
  மாநகராட்சி  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]
மாநகராட்சித் தலைவர் திரு.மருதராஜ்
மக்களவைத் தொகுதி திண்டுக்கல்
மக்கள் தொகை 2
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வரலாறு

திண்டுக்கல் நகராட்சி

திண்டுக்கல் நகராட்சி மன்றம் கி.பி.1866 நவம்பர் 1-ம் தேதி முதல் நகராட்சியாக செயல்படுகிறது. இந்த நகராட்சியை ஆங்கிலேயர் உருவாக்கினர்.கி.பி.1988-ம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. மிகவும் பழமை வாய்ந்த இந்த நகராட்சி உருவாகி 2016-ஆம் ஆண்டுடன் 150 ஆண்டுகள் ஆகின்றன.[6]

மாநகராட்சியாக தரம் உயர்வு

திண்டுக்கல் நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து வந்தது.மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. [7]

மாநகராட்சி விரிவாக்கம்

திண்டுக்கல் நகராட்சியில் முன்னர் நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், முகமதியா புரம் ,சவேரியார் பாளையம், கோவிந்தாபுரம், ஆர்.எம்.காலனி, என்.ஜி.ஓ.காலனி, ரவுன்டு ரோடு, அசனாத் புரம் போன்ற பகுதிகள் இருந்தன. திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து,நகரை சுற்றி அமைந்துள்ள பாலகிருஷ்ணாபுரம்,பள்ளப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, தோட்டனூத்து, அடியனூத்து உள்பட 10 ஊராட்சிகள் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைந்துள்ளன.[8]

மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
127 ச.கிமீ. [9]
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 2,07,225
தற்பொழுதய திண்டுக்கல் மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்
ஆணையர் மேயர் துணை மேயர் மாநகராட்சி உறுப்பினர்கள்
திரு.ராஜன் திரு.மருதராஜ் திரு.துளசிராம் 48 உறுப்பினர்கள்

[10]

சிறந்த மாநகராட்சிக்கான விருது

2016 ஆம் ஆண்டு 70 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன.இதில் சிறந்த மாநகராட்சிக்கான விருது திண்டுக்கல் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.விருதுடன் ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. [11] மேலும், வந்த முதல் வருடத்தில் சிறந்த மாநகராட்சி விருதை பெற்ற பெருமை திண்டுக்கல் மாநகராட்சியையே சேரும்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.maalaimalar.com/2014/02/20115514/marutharaj-will-sworn-tomorrow.html
  5. "Thanjavur and Dindigul to be upgraded as City Municipal Corporations". Chennaionline.com. பார்த்த நாள் 10 April 2013.
  6. http://tamil.thehindu.com/opinion/reporter-page/மாநகராட்சியாக-மாறியது-திண்டுக்கல்-நகராட்சி-வரலாற்றுச்-சிறப்புமிக்க-149-ஆண்டு-கால-பழமையான-நகராட்சி/article5707514.ece
  7. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=53235
  8. http://www.dailythanthi.com/News/Districts/2015/09/07000039/Upgradation--127-square-kilometers-of-the-border-as.vpf
  9. http://www.dailythanthi.com/News/Districts/2015/09/07000039/Upgradation--127-square-kilometers-of-the-border-as.vpf
  10. http://www.dailythanthi.com/News/Districts/2015/08/05002213/Panchayat-passed-a-resolution-linking-the-city-of.vpf
  11. "சிறந்த மாநகராட்சிக்கான விருதை தட்டிச் சென்ற திண்டுக்கல்". தமிழ் ஒன் இந்தியா. பார்த்த நாள் 15 ஆகத்து 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.