கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (IATA: CJB, ICAO: VOCB) தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரின் பீளமேட்டில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம். இது முன்பு பீளமேடு விமானநிலையம் அல்லது கோயம்புத்தூர் குடிசார் விமானநிலையம் என அழைக்கப்பட்டது. இது விமான போக்குவரத்தில் இந்தியாவின் பதினாறாவது மிக பெரிய விமான நிலையம் ஆகும்.
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் பீளமேடு வானூர்தி நிலையம் | |||
---|---|---|---|
| |||
IATA: CJB – ICAO: VOCB | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்திநிலைய வகை | பொது | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||
சேவை புரிவது | கோயம்புத்தூர் மற்றும் அடுத்துள்ள மாவட்டங்கள் | ||
அமைவிடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா | ||
உயரம் AMSL | 1,324 அடி / 404 மீ | ||
ஆள்கூறுகள் | 11°01′48″N 077°02′36″E | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
05/23 | 9,760 | 2,990 | தார்ச்சாலை |
புள்ளிவிவரங்கள் (2014-15) | |||
பயணியர் வரத்து | 1,429,198 | ||
வானூர்தி வரத்து | 17,691 | ||
சரக்கு வரத்து | 3,44,790 | ||
இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1] |
வரலாறு
1940களில் கோயம்புத்தூர் குடிசார் விமான நிலையம் இந்தியன் ஏயர்லைன்சின் ஃபோக்கர் F27, டக்ளஸ் DC-3, ஆவ்ரோ748 வானூர்திகள் பயன்படுத்துமாறு தனது இயக்கத்தைத் துவங்கியது. துவக்கக் காலங்களில் சென்னைக்கும் மும்பைக்கும் மட்டுமே சேவைகள் இருந்தன. பின்னர் கொச்சி மற்றும் பெங்களுருக்கு சேவைகள் இயக்கப்பட்டன. 1980களில் சேவைகள் நிறுத்தப்பட்டு நவீன வானூர்திகள் இயங்க வசதியாக ஓடுபாதை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டது. தடைபட்ட காலத்தில் சேவைகள் வான்படையைச் சேர்ந்த சூலூர் வானூர்திநிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டு விரிவாக்கப்பணி முடிவடைந்த பிறகு நிலையம் மீள சேவைகளை இயக்கியது. 1995 முதல் பன்னாட்டுச் சேவைகள் சார்ஜாவிற்கு தொடங்கின. 2007ஆம் ஆண்டு பன்னாட்டுச் சேவைகள் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் நிலையங்களுக்கு விரிவானது.
வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
வானூர்திச் சேவைகள் | சேரிடங்கள் |
---|---|
அலையன்ஸ் ஏர் | சென்னை |
ஏர் அரேபியா | சார்ஜா |
ஏர் இந்தியா | மங்களூரு (முடிவு 28 பங்குனி 2020), தில்லி, மும்பை, சென்னை |
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் | சிங்கப்பூர், டில்லி |
இன்டிகோ | ஐதராபாத்து, தில்லி, பூனா, மும்பை, சென்னை, பெங்களூர் |
சிறீலங்கன் விமானச் சேவை | கொழும்பு |
ஸ்கூட் ஏர் | சிங்கப்பூர் |
ஸ்பைஸ் ஜெட் | தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், |
மேற்கோள்கள்
- "பயணியர் வரத்து" (jsp). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். பார்த்த நாள் 17 May 2015.