பீளமேடு

பீளமேடு கோயம்புத்தூர் நகரின் புறநகர்ப்பகுதியாகும். இங்கு கோவையின் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு நெசவாலைகளும் ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பு நிறுவனங்களும் வார்ப்பகங்களும் மின்னோடி/இறைப்பி தொழிற்சாலைகளும் மிகுந்து காணப்படுகின்றன. இது கோவையில் கல்விமையமாகவும் பல மருத்துவ,பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் சிறந்த பள்ளிக்கூடங்களையும் கொண்டு விளங்குகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் கோவை சென்டர் மருத்துவமனையும் இங்குள்ளன. இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள இப்பகுதியில் மாரியம்மன் கோவில், கரிவரதராஜப் பெருமாள் கோவில், ஆஞ்சனேயர் கோவில், அகிலாண்டேசுவரி கோவில் ஆகியன உள்ளன.

பீளமேடு
  ~ நகராட்சி ~  
பீளமேடு
இருப்பிடம்: பீளமேடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°06′N 77°12′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோவை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,319 மீட்டர்கள் (4,327 ft)

கோவை மாவட்ட சிறுதொழில் முனைவோர் சங்க வளாகமான கொடிசியா வளாகம் இப்பகுதியில்தான் அமைந்துள்ளது.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 47 பீளமேட்டின் ஊடாகச் செல்கிறது. மேலும் பீளமேட்டில் ஒரு இரயில் நிலையமும் உள்ளது.

கல்வி நிலையங்கள்

  • பூ. ச. கோ. தொழில்நுட்பக் கல்லூரி
  • சர்வசன பள்ளி
  • பூ. ச. கோ. மருத்துவக்கல்லூரி
  • கிருஷ்ணம்மாள் கல்லூரி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.