வால்பாறை
வால்பாறை (ஆங்கிலம்:Valparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி ஆகும்.

வால்பாறை | |
— தேர்வு நிலை நகராட்சி — | |
அமைவிடம் | 10°22′N 76°58′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | வால்பாறை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | கு. இராசாமணி இ. ஆ. ப. [3] |
நகர்மன்றத் தலைவர் | |
மக்கள் தொகை | 70 (2011) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,193 மீட்டர்கள் (3,914 ft) |
குறியீடுகள்
|

புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.37°N 76.97°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 மீட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,859 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.4% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "Valparai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்