பொள்ளாச்சி
பொள்ளாச்சி (Pollachi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது. [4]
பொள்ளாச்சி | |
— சிறப்பு நிலை நகராட்சி — | |
அமைவிடம் | 10°40′N 77°01′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பொள்ளாச்சி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | கு. இராசாமணி இ. ஆ. ப. [3] |
நகராட்சித் தலைவர் | |
ஆணையர் | |
மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி |
மக்கள் தொகை • அடர்த்தி |
90,180 (2011) • 6,502/km2 (16,840/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
13.87 சதுர கிலோமீட்டர்கள் (5.36 sq mi) • 293 மீட்டர்கள் (961 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | http://123.63.242.116/pollachi/ |
பெயர்க்காரணம்
'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10.67°N 77.02°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது. பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 90,180 ஆகும். அதில் 44,813 ஆண்களும், 45,367 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.8% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,531 மற்றும் 258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.84%, இசுலாமியர்கள் 11.76%, கிறித்தவர்கள் 4.24% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[6]
புகழ்பெற்றவர்கள
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
சிறப்புகள்
மாட்டுச் சந்தை
பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருள்களுக்குச் சிறப்புப் பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்தச் சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காகக் கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்தச் சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது.
திரைப்பட படப்பிடிப்புகள்
பொள்ளச்சி தமிழ்த் திரையுலகின் பிரபல திரைப்படப் படப்பிடிப்பு தளமாக விளங்குகிறது. இதற்கு, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கையின் அழகும் சிறப்பான தட்பவெட்ப நிலையும் காரணமாக அமைகின்றன. வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படம்பிடிப்பதை விட, மிக மிகக் குறைவான செலவிலேயே இங்கே படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்பது பொள்ளாச்சியின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.
தென்னை பொருட்கள்
பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் பதனி இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது.
சுற்றுலாத் தலங்கள்
தென்னை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய்ப் பொருள்களுக்குப் பெயர் பெற்றுக் காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்தப் பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. பொள்ளச்சியின் அருகே இருக்கும் பெரிய அணைக்கட்டுகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவருகிறது.
கலைகள்
சிக்காட்டம்[7] எனும் கலை சிறப்புமிக்கதாகும்.இந்த கலைக்குழுக்கள் பொள்ளாசசி பகுதிகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடையது.
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்
- "Pollachi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
- பொள்ளாச்சி நகர மக்கள்தொகை பரம்பல்
- "sikkattam kannadivenpura", YouTube, retrieved 2018-03-05