அலையன்ஸ் ஏர்

அலையன்ஸ் ஏர் (Alliance Air (India) என்பது ஏர் இந்தியாவின் ஒரு முழுமையான துணை நிறுவனமாக 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த விமான நிறுவனம் பிரதானமாக பிராந்தியங்களை இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள பிராந்திய பாதைகளை இயக்குகிறது.

வரலாறு

அலையன்ஸ் ஏர் 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2007 ல், ஏர் இந்தியாவுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைந்தபோது, ஏர் இந்தியாவின் புதிய அடையாளமாக உள்நாட்டு போக்குவரத்தில் மாறியது. </ref> In March 2017, the airline was again renamed Alliance Air.[1]

செல்லுமிடங்கள்

இது 2017 செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி இந்தியாவில் 46 இடங்களுக்கு இந்நிறுவனம் சேவையளிக்கின்றது. முக்கியமாக பெங்களூரு, சென்னை,திருச்சி டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, அகத்தி, ஆக்ரா,அகமதாபாத்,பாவ்நகர்,போபால்,கோவா,குவகாத்தி, ஹூப்ளி,இந்தூர்,தர்மசாலா,கொச்சி,குலு,லக்னோ,மதுரை, பாட்னா,பதான்கோட்,புனே,ராஞ்சி,ஷில்லாங்,சிம்லா,சூரத்,சீரடி,தேஜ்பூர், திருப்பதி,உதய்ப்பூர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்தியாவின் பிராந்திய சேவைகள் செயல்படுகிறது.[2]

விமான குழு விவரங்கள்

அலையன்ஸ் ஏர் விமான குழு ATR 42-300, ATR 72-600 ரக விமானங்களைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்

  1. "Air India Regional". Air India.
  2. "Alliance Air". பார்த்த நாள் 18 September 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.