அகமதாபாத்

அகமதாபாத் (குஜராத்தி: અમદાવાદ, சிந்தி: ا د آ ڡڢګڪا, Ahmedabad) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரான கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும்.

அகமதாபாத்
அகமதாபாத்
இருப்பிடம்: அகமதாபாத்
, குஜராத் , இந்தியா
அமைவிடம் 23°02′N 72°35′E
நாடு  இந்தியா
மாநிலம் குஜராத்
ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி
முதலமைச்சர் விஜய் ருபானி
நகரத் தந்தை பிகாஷ் பட்டாச்சார்யா
மக்களவைத் தொகுதி அகமதாபாத்
மக்கள் தொகை

அடர்த்தி

39,59,432 (2010)

22,473/km2 (58,205/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

205 சதுர கிலோமீட்டர்கள் (79 sq mi)

53 மீட்டர்கள் (174 ft)

இணையதளம் www.egovamc.com

இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குஜராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. அகமதாபாத் இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன.[1]

உலகின் பாரம்பரிய அறிவிப்பு

அகமதாபாத் நகரம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

அகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.[2]

சான்றுகள்

  1. "Ahmedabad joins ITES hot spots". Times of India. 16 August 2002. http://infotech.indiatimes.com/articleshow/19249001.cms. பார்த்த நாள்: 30 July 2006.
  2. "அகமதாபாத்: இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம்". கட்டுரை. தி இந்து (2017 சூலை 22). பார்த்த நாள் 23 சூலை 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.