திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் (ஆங்கிலம்: Tirupathur District) இந்திய நாடு, தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட 35-வது மாவட்டமாகும். இம்மாவட்டத்தை வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து ஆகஸ்டு 15.8.2019 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருப்பத்தூர் அகும். [2]

திருப்பத்தூர் மாவட்டம்
TIRUPATHUR DISTRICT
மாவட்டம்
வேலூர் மாவட்டத்துடன் ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருப்பத்தூர்
நிறுவப்பட்ட நாள்28 நவமப்ர் 2019
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
மண்டலம்தொண்டை நாடு
அரசு
  வகைமாவட்டம்
  Bodyதிருப்பத்தூர் மாவட்டம்
  பெரிய நகரம்திருப்பத்தூர்
  மக்களவைத் தொகுதிகள்1
  சட்டமன்றத் தொகுதிகள்4
  மாவட்ட ஆட்சியர்திரு.சிவன் அருள் [1]
  வட்டங்கள்4
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு635601, 635602
வாகனப் பதிவுTN 83
நகரங்கள்ஆம்பூர், வாணியம்பாடி
வருவாய் கோட்டங்கள்2
ஊராட்சி ஒன்றியங்கள்6
பேரூராட்சிகள்4
நகராட்சிகள்4
காவல்துறை கண்காணிப்பாளர்திரு.விஜயகுமார்

வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது.வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது. பின்னர் வேலூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2019 அன்று திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.[3]புதிய திருப்பத்தூர் மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி. கே. பழனிச்சாமி முறைப்படி துவக்கி வைத்தார்.[4]

மாவட்ட நிர்வாகம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும் கொண்டது.[5]

வருவாய் வட்டங்கள்

  1. ஆம்பூர் வட்டம்
  2. வாணியம்பாடி வட்டம்
  3. திருப்பத்தூர் வட்டம்
  4. நாட்ராம்பள்ளி வட்டம்

உள்ளாட்சி அமைப்புகள்

நகராட்சிகள்

  1. திருப்பத்தூர்
  2. வாணியம்பாடி
  3. ஆம்பூர்
  4. ஜோலார்பேட்டை

பேரூராட்சிகள்

  1. உதயேந்திரம்
  2. ஆலங்காயம்
  3. அம்மூர்
  4. நாற்றம்பள்ளி

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்
  2. ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம்
  3. ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
  4. நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
  5. கந்திலி ஊராட்சி ஒன்றியம்
  6. மாதனூர் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

இம்மாவட்டத்தின் பகுதிகள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ளது. மேலும் இம்மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி என 4 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்




This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.