செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது.[2]தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.[3]இம்மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம் ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டம் CHENGALPATTU DISTRICT செங்கை மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() காஞ்சிபுரத்துடன் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
நிறுவப்பட்ட நாள் | 29 நவம்பர் 2019 |
நிர்மாணித்தவர் | தமிழ்நாடு அரசு |
மண்டலம் | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | மாவட்டம் |
• Body | செங்கல்பட்டு மாவட்டம் |
• பெரிய நகரம் | தாம்பரம் |
• மக்களவைத் தொகுதிகள் | காஞ்சிபுரம் |
• சட்டமன்றத் தொகுதிகள் | 1.செங்கல்பட்டு 2.தாம்பரம் 3.பல்லாவரம் 4.மதுராந்தகம் 5.திருப்போரூர் 6.செய்யூர் |
• மாவட்ட ஆட்சியர் | திரு. ஜான் லூயிஸ் [1] |
• மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் | திரு. கண்ணன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,945 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,56,423 |
• தரவரிசை | 8th |
• அடர்த்தி | 870 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 603XXX,600XXX |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 044 |
வாகனப் பதிவு | TN 19, TN 11, TN 14 |
நகரங்கள் | 1.செங்கல்பட்டு 2.பல்லாவரம் 3.மறைமலைநகர் |
வருவாய் கோட்டங்கள் | 1.செங்கல்பட்டு 2.தாம்பரம் 3.மதுராந்தகம் |
நகராட்சிகள் | 1.செங்கல்பட்டு 2.தாம்பரம் 3.பல்லாவரம் 4.மதுராந்தகம் 5.மறைமலைநகர் 6.பம்மல் 7.செம்பாக்கம் 8.அனகாபுத்தூர் |
வரலாறு
சுதந்திர இந்தியாவுக்கு முன்பு செங்கல்பட்டு நகரத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டன.
சுதந்திரம் அடைந்த பிறகு சென்னை மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பிரிவு தலைமையகம் மட்டும் சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் செயல்பட்டது.
1967 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டையில் இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாக நகரமாக காஞ்சிபுரமும், நீதி நகரமாக செங்கல்பட்டும் செயல்பட்டது.
1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை பரப்பளவில் மிக பெரிதாக இருந்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து நிறுவப்பட்ட புதிய செங்கல்பட்டு மாவட்டத் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.[4]
புதிய செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகள்
காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.[5] [6]
வருவாய் கோட்டங்கள்
- தாம்பரம் வருவாய் கோட்டம்
- செங்கல்பட்டு வருவாய் கோட்டம்
- மதுராந்தகம் வருவாய் கோட்டம்
வருவாய் வட்டங்கள்
உள்ளாட்சி & ஊராட்சி நிர்வாகம்
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
ஊராட்சி ஒன்றியங்கள்
அரசியல்
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
- தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
- காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது
- தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைப்பு
- புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
வெளி இணைப்புகள்