குற்றாலம்

குற்றாலம் (Courtalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.

குற்றாலம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

2,089 (2011)

272/km2 (704/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.68 சதுர கிலோமீட்டர்கள் (2.97 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/courttalam

மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறபடுகிறது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

இது திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலவிலும், செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 5 கிமீ தொலவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் குற்றாலம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குற்றாலாம் பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

அமைவிடம்

குற்றாலம் மலை

குற்றாலம் செங்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்,திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் தென்காசி தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலம் அருவிகள்

பேரருவி
ஐந்தருவி

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. 1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

  1. குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
  2. சித்திர சபை
  3. தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்
  4. சிறுவர் பூங்கா
  5. பூங்கா
  6. கலைவாணர் அரங்கம்

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்
  4. குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Courtalam Population Census 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.