அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் (ஆங்கிலம்:Ambasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம்
இருப்பிடம்: அம்பாசமுத்திரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°42′N 77°28′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]
நகர்மன்ற தலைவர் செல்வி
சட்டமன்றத் தொகுதி அம்பாசமுத்திரம்
சட்டமன்ற உறுப்பினர்

முருகையா பாண்டியன் (அதிமுக)

மக்கள் தொகை 32,681 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


76 மீட்டர்கள் (249 ft)

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.7°N 77.47°E / 8.7; 77.47 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,645 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அம்பாசமுத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 86.94% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.79%, பெண்களின் கல்வியறிவு 81.40% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. அம்பாசமுத்திரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இளங்கோக்குடி

வரகுண பாண்டிய மன்னரது (கி.பி 862-865) காலக்குறிப்பின்படி அம்பாசமுத்திரத்திலுள்ள பழமையான கோயிலான எரிச்சாவுடையார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில்

முள்ளிநாட்டு இளங்குகாய்க் குடி படாரர்க்கு முதல் கெடாமல் பொலி கொண்டு நான்கு காலமும் திருவமுது செலுத்துவதாக வரகுணமகாராஜர் வீற்றிருந்தணணது இளங்கோக்குடி சபையார் கையில் கொடுத்த காசு

என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

முள்ளிநாட்டைச் சேர்ந்த இளங்கோக்குடி என்பதே அம்பாசமுத்திரத்தின் பழம் பெயராகும்.

காசிநாதர் கோயிலில் கர்ப்பகிருக வடசுவரில் உள்ள கல்வெட்டிலும் இளங்கோக்குடி என்று வருகிறது.

அம்பாசமுத்திரத்திற்கு இளங்கோக்குடி வேளாக்குறிச்சி என்ற பெயர்கள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை அதாவது திருவிதாங்கூர் மன்னன் உதயமார்த்தாண்டவர்மன் காலம் வரை இருந்து வந்தது. இளவரசன் தங்கிய இடம் என்ற பொருளில் இளங்கோக்குடி என்று பெயர் ஏற்பட்டதாகச் செவிவழிச் செய்தி கூறுகிறது. வேளாக்குறிச்சி என்ற பெயர் வேளாளர் வாழ்ந்த பகுதிக்கு வைக்கப்பட்ட பெயராக இருந்திருக்கலாம்.[6]

பெயர்க் காரணம்

தமிழ்நாட்டு மன்னர்கள், செல்வந்தர்கள் உண்டாக்கிய பெரிய ஏரிகள் கடல் என்றும், சமுத்திரம் என்றும் அழைக்கப்பெற்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் வந்து குடியேறிய படைத்தலைவர்கள் பெயரில் பெருங்குளங்கள் பல ஆங்காங்கே அமைந்தன. அவற்றைச் சார்ந்த ஊர்களை அவரவர் பெயரால் அழைத்தனர். இரவணன், வடமலை, அரங்கன், தளபதி, வாலன், கோபாலன் என்பவர்களுடைய பெயரால் தென்பாண்டி நாட்டில் ஆங்காங்கே ஊர்கள் அமைந்தன. இரவண சமுத்திரம், வடமலை சமுத்திரம், அரங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வாலசமுத்திரம், கோபால சமுத்திரம் என்பவை இவ்வாறு பெயர் பெற்ற ஊர்களாகும். பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன. இங்கு அம்பா, அம்மா, அம்மை என்ற சொற்கள் தாய், காளி, உமாதேவி என்ற பொருளை உடையன.இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும்.[6]

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Ambasamudram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.
  5. "இந்திய 20011 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 19, 2015.
  6. பொதிகைச்சாரல் மாத இதழில் (பிப்ரவரி-2011) வரலாற்று ஆசிரியர் செ. திவான் எழுதிய அம்பாசமுத்திரம் கட்டுரை.

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.