பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் (ஆங்கிலம்:Pallipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். அக்டோபர் 7, 2004ல் இது பேரூராட்சியிலிருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிபாளையம்
  நகரம்  
பள்ளிபாளையம்
இருப்பிடம்: பள்ளிபாளையம்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 11°22′N 77°46′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் குமாரபாளையம்

தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
மக்களவைத் தொகுதி பள்ளிபாளையம்
மக்கள் தொகை

அடர்த்தி

35,214 (2001)

7,492/km2 (19,404/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.70 சதுர கிலோமீட்டர்கள் (1.81 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/Pallipalayam

இது காவிரி ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. ஆற்றுக்கு எதிர்புறம் (மேற்கு பகுதியில்) ஈரோடு நகரம் உள்ளது. காவிரியின் கரையோரமாக இருந்தபோதிலும் இது பாறைகள் கூடிய இடமாகும். விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. விசைத்தறி கூடம் சார்ந்த சாய பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆறு மாசுபடுகிறது. பள்ளிபாளையம் சிக்கன் என்ற உணவு புகழ் பெற்றதாகும்.

இந்நகரம் ஈரோட்டிலுருந்து 3 கிமீ தொலைவிலும், குமாரபாளையத்திலிருந்து தென்கிழக்கே 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பள்ளிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம்

2011 உள்ளாட்சி தேர்தல்

2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெள்ளியங்கிரி பி.எசு வெற்றி பெற்று நகரவை தலைவரானார்.

வேட்பாளர்கட்சிபெற்ற வாக்குகள்
கணேசன் ஆர்தேமுதிக2947
குமார் அதிமுக9008
பழனியப்பன் எம்பாமக190
பெஞ்சமின் ஜேகாங்கிரசு319
வெள்ளியங்கிரி பி.எஸ்அதிமுக11831

ஆதாரங்கள்

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.