தமிழக ஆளுநர்களின் பட்டியல்
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.
இக்கட்டுரை ![]() |
தமிழக ஆளுநர்
| |
---|---|
![]() ராஜ் பவன், தமிழ்நாடு | |
வாழுமிடம் | ராஜ் பவன், சென்னை (தமிழ்நாடு) |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
இணைய தளம் | www.tnrajbhavan.gov.in |

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
தற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]
இம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு பன்வாரிலால் புரோகித்[3] பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.
ஆளுநர்கள்

மதராஸ் இராஜதானி அல்லது மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , ஆந்திராவின் கடற்கரை மற்றும் ராயலசீமா பிராந்தியங்கள், பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.
மதராஸ் இராஜதானி 1653 இல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மாணிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின், மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[4]
- Tabular
# | பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | காலவரை[nb 1] |
---|---|---|---|---|
1 | ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை | 6 மே1946 | 7 செப்டம்பர் 1948 | 1 |
2 | கிருஷ்ண குமாரசிங் பவசிங் | 7 செப்டம்பர் 1948 | 12 மார்ச் 1952 | 1 |
3 | ஸ்ரீ பிரகாசா | 12 மார்ச்1952 | 10 டிசம்பர் 1956 | 1 |
4 | ஏ.ஜெ. ஜான் | 10 டிசம்பர்1956 | 30 செப்டம்பர் 1958 | 1 |
5 | பகாலா வெங்கட்ட ராஜமன்னார் (தற்காலிகம்) | 1 அக்டோபர் 1958 | 24 ஜனவரி 1958 | 1 |
6 | விஷ்ணுராம் மேதி | 24 ஜனவரி 1958 | 4 மே 1964 | 1 |
7 | ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் | 4 மே 1964 | 24 நவம்பர் 1964 | 1 |
8 | பி. சந்திர ரெட்டி (தற்காலிகம்)[5] | 24 நவம்பர் 1964 | 7 டிசம்பர் 1965 | 1 |
9 | ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் [nb 2] | 7 டிசம்பர் 1965 | 28 ஜூன் 1966 | 1 |
10 | சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை) | 28 ஜூன் 1966 | 14 ஜனவரி 1969 | 1 |
தமிழ்நாடு
மதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- அட்டவணை
வரலாற்றுப் பதிவுகள்

- ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் மற்றும் அதிக நாட்கள் பதவி வகித்தவர்- மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் ஆகஸ்ட் 31 2011 வரை.
- தமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவராக எம்.எம். இஸ்மாயில் என்பவர். தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த இவர் பதவி வகித்த காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980-நவம்பர் 4. 1980).
மேற்கோள்கள்
- 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)
- லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- தமிழகச் செயலகம் — சுருக்க வரலாறு (தமிழ் நாடு அரசு, 17 செப்டம்பர் 2008)
- மாண்புமிகு ஸ்ரீ நீதியரசர் பி. சந்திர ரெட்டி (ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், ஐதராபாத், 29 செப்டம்பர், 2008)
- முன்னாள் ஆளுநர்கள் (ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்), சென்னை, 20 செப்டம்பர் 2008)
குறிப்புகள்
- எண் வகையில் வரிசைக்கிரமமாக அவர்கள் பதவி வகித்த காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது
- இந்தக் காலம் ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் ன் காலத் தொடர்ச்சி, முதல் காலத்தில் பி.சந்திர ரெட்டி தற்காலிக ஆளுநராக, ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது பதவி வகித்திருந்தார்