புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
புதுச்சேரி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதி (ஆட்சிப் பரப்பு) ஆகும் ஆனால் தனி மாநிலம் அல்ல. புதுதில்லியின் நேரடி குடியரசுத் தலைவரின் ஆளுமைக்குட்பட்டதாகும். புதுதில்லியை போன்று இங்கும் சிறப்பு திருத்த அரசியலமைப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பெற்ற சட்டப்பேரவை, முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை போன்ற அமைப்புகள் இப்பகுதியின் ஆளுமையில் பங்குபெறுகின்றன. குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக புதுச்சேரி ஆட்சிப்பகுதியின் மேற்பார்வையாளர்களாக செயல்படுவர் துணைநிலை ஆளுநர் ஆவார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
துணைநிலை ஆளுநர்
புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தென் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர் புதுச்சேரியின் அரசியலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.
இவரது இல்லம் புதுச்சேரி நேரு பூங்காவில் உள்ள முன்னாள் பிரஞ்சு ஆளுநர் அரண்மணையான ராஜ் நிவாஸ் ஆகும். நடுவண் அரசு நேரிடையாக இவ்வரசிற்குத் தேவையான நிதிவளத்தை வழங்குகின்றது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்கள்
வ.எண் | பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | எஸ்.எல். சிலாம் | 14.10.1963 | 13.10.1968 |
2 | பி.டி. ஜாத்தி | 14.10.1968 | 07.11.1972 |
3 | செடிலால் | 08.11.1972 | 29.08.1976 |
4 | பி.டி. குல்கர்னி | 30.08.1976 | 31.10.1980 |
5 | ஆர்.கே. வயாஸ் | 30.08.1976 | 31.10.1980 |
6 | ஆர்.என். அல்திபூர் | 27.07.1981 | 14.05.1982 |
7 | கே.எம். சாண்டி | 15.05.1982 | 05.08.1983 |
8 | கோனா பிராபாகர ராவ் | 02.09.1983 | 17.06.1984 |
9 | திருபுவன் பிரசாத் திவாரி | 01.10.1984 | 21.06.1988 |
10 | ரஞ்சித் சிங் தயாள் | 22.06.1988 | 19.02.1990 |
11 | சந்திரவதி | 19.02.1990 | 18.12.1990 |
12 | அர் சுவருப் சிங் | 19.12.1990 | 05.02.1993 |
13 | ராஜேந்திர குமாரி பாஜ்பாய் | 02.05.1995 | 22.04.1998 |
14 | ரஜனி ராய் | 23.04.1998 | 29.07.2002 |
15 | கே. ஆர். மால்கனி | 31.07.2002 | 27.10.2003 |
16 | நாகேந்திர நாத் ஜா | 05.01.2004 | 06.07.2004 |
17 | எம். எம். லக்கேரா | 07.07.2004 | 18.07.2006 |
18 | முக்குத் மித்தை | 19.07.2006 | 12.03.2008 |
19 | பூபிந்தர் சிங் | 15.03.2008 | 22.07.2008 |
20 | கோவிந்த் சிங் குர்ஜார் | 23.07.2008 | 06.04.2009 |
21 | இக்பால் சிங் | 27.07.2009 | 09.07.2013 |
22 | வீரேந்திர கட்டாரியா | 10.07.2013 | 11.07.2014 |
23 | அஜய் குமார் சிங்க் | 12.07.2014 | 26.05.2016 |
24 | கிரண் பேடி | 29.05.2016 | - |