இரண்டாம் நிலை நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன.

இக்கட்டுரை
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.

ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன.

வருமான வகை

ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இரண்டாம் நிலை நகராட்சிப் பட்டியல்[1]

  1. அம்பாசமுத்திரம்
  2. அரியலூர்
  3. அனகாபுத்தூர்
  4. உசிலம்பட்டி
  5. ஒட்டன்சத்திரம்
  6. காங்கேயம்
  7. காயல்பட்டினம்
  8. கீழக்கரை
  9. குழித்துறை
  10. குளித்தலை
  11. கூடலூர் (நீலகிரி மாவட்டம்)
  12. கூடலூர் (தேனி)
  13. கூத்தாநல்லூர்
  14. சாத்தூர்
  15. சின்னமனூர்
  16. சீர்காழி
  17. செங்கோட்டை
  18. திருத்துறைப்பூண்டி
  19. திருமங்கலம்
  20. செய்யாறு
  21. திருத்தணி
  22. துவாக்குடி
  23. நரசிங்கபுரம்
  24. நெல்லியாளம்
  25. நெல்லிக்குப்பம்
  26. பள்ளிபாளையம்
  27. பத்மனாபபுரம்
  28. பவானி
  29. பெரம்பலூர்
  30. பெரியகுளம்
  31. பேரணாம்பட்டு
  32. புஞ்சைப்புளியம்பட்டி
  33. புளியங்குடி
  34. மதுராந்தகம்
  35. மேல்விஷாரம்
  36. மேலூர்
  37. வந்தவாசி
  38. வாலாஜாபேட்டை
  39. விக்கிரமசிங்கபுரம்
  40. வெள்ளக்கோயில்
  41. வேதாரண்யம்
  42. ஜெயங்கொண்டம்
  43. ஜோலார்பேட்டை
  44. செங்கம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

ஆதாரம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.