செங்கம்

செங்கம்(ஆங்கிலம்:Chengam) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியம், செங்கம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலைப்பேரூராட்சியும் ஆகும். இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

செங்கம்
CHENGAM
மூன்றாம் நிலை நகராட்சி
அடைபெயர்(கள்): திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள நகரம்
செங்கம்
செங்கம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 12.304061°N 78.792451°E / 12.304061; 78.792451
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்திருவண்ணாமலை
சட்டமன்றத் தொகுதிசெங்கம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
  வகைமூன்றாம் நிலை நகராட்சி
  Bodyசெங்கம் நகராட்சி
  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்திருவண்ணாமலை
  மக்களவை உறுப்பினர்திரு.சி.அண்ணாதுரை
  சட்டமன்ற உறுப்பினர்திரு.
  மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை (2011)
  மொத்தம்54,278
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 25
ஊராட்சி ஒன்றியம்செங்கம்
சென்னையிலிருந்து தொலைவு229 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு33 கி.மீ
புதுச்சேரியிலிருந்து தொலைவு139 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு75 கிமீ
திருப்பத்தூரிலிருந்து தொலைவு52 கிமீ
வேலூரிலிருந்து தொலைவு99 கிமீ
பெங்களூரிலிருந்து தொலைவு171 கிமீ
இணையதளம்செங்கம்

வரலாறு

சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டில் இடம்பெற்ற மலைபடுகடாம் என்ற நூலில் பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த செங்கத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் நன்னன்சேய் நன்னன் ஆண்டதாக குறிப்பிடுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகை பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. நன்னன் ஆட்சிக்குட்பட்ட நவிர மலை என்பது தற்போது சவ்வாது மலை பகுதியைக்குறிக்கும் என்று சிலரும் கடலாடிக்கு அருகிலுள்ள பர்வதமலையைக்குறிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்[].

அமைவிடம்

புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு வழித்தடத்தில் அமைந்த செங்கம் நகராட்சி, திருவண்ணாமலையிலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கே போளூர் 49 கிமீ மற்றும் ஆரணி 75 கிமீ தொலைவிலும், மேற்கே திருப்பத்தூர் 52 கிமீ தொலைவிலும், சாத்தனூர் அணையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 31 கிமீ தொலைவிலும் மற்றும் கிருஷ்ணகிரியிலிருந்து 81 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சாலை வசதிகள்

செங்கம் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது. செங்கம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

ஆகிய முக்கிய சாலைகள் செங்கம் நகரத்தை இணைக்கிறது.

பேருந்து வசதிகள்

செங்கம் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 54278 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். [2]

Linguistic census
Linguistic groups Percent(%)
தமிழ்
 
87.64%
உருது
 
7.79%
தெலுங்கு
 
4.01%
கிரேக்கம்
 
0.4%
மலையாளம்
 
0.13%
இதர
 
0.01%


மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1901 3,867     
1921 6,305 +63.0%
1931 9,457 +50.0%
1941 11,678 +23.5%
1951 14,912 +27.7%
1961 17,441 +17.0%
1981 23,462 +34.5%
1991 31,196 +33.0%
2001 41,037 +31.5%
2011 54,278 +32.3%
Sources:

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.3°N 78.8°E / 12.3; 78.8 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது

கோவில்கள்

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. [6] இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.

செங்கம் நகரில் செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் என்னும் சப்தமாதர் ஆலயம் மிகவும் பழமையான ஆலயம் உள்ளது பல நூற்றாண்டுகள் பழமையான திருக்கோவில் இது பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று ஆம் நீண்ட கருவறை கூடிய திருக்கோவில் இது விஜயநகரப் பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகிறது பல தமிழ் ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோவிலில் ஆடி மாதத்தில் வரும் ஆடி மூன்றாம் வெள்ளிக் கிழமை அன்று ஊரணி பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது மிகவும் பழமையான இத்திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ காளியம்மன் மற்றும் கன்னிமார்களின் பல பெயர்கள் குறிப்பிடப்படுகிறது அதில் குறிப்பிட்ட சில பெயர்கள் வளையல் காரி என்றும் சப்தகன்னியர் என்றும் காளியம்மன் திருக்கோவில் என்றும் செங்கொடி அம்மன் என்றும் மாற்றம் பல திருப்பெயர்களை கொண்டுள்ளது இவ்வாலயத்தில் பழமையான மூலவர் சிலைகள் சப்தகன்னியர்கள் வீரபத்திரர் விநாயகர் சிலைகளை மட்டுமே ஆகும் ஆனால் உற்சவர் சிலை காளி சிலை மட்டுமே ஆகும் பழமையான பழைய மூலவர் சிலைகள் சிதிலமடைந்து விட்ட காரணத்தினால் தற்போது சிலைகள் புதிதாக செய்யப்பட்டு விட்டது மிகவும் பழமையான இத்திருக்கோவில் பல வரலாற்று சுவடுகளை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது.

ஆதாரங்கள்

  1. செங்கம் பேரூராட்சியின் இணையதளம்
  2. Chengam Population Census 2011
  3. "Population Details". Tiruvannamalai municipality (2011). மூல முகவரியிலிருந்து 2014-02-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-12-29.
  4. "Census Info 2011 Final population totals – Salem(05740)". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014.
  5. "Chengam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  6. https://temple.dinamalar.com/New.php?id=1037


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.