ஊத்தங்கரை

ஊத்தங்கரை (ஆங்கிலம்:Uthangarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.ஊத்தங்கரை ஒரு கல்வி நகரம் என அழைக்கப்படுகின்றது.[3]இங்கு உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு பள்ளிகள் போட்டி போட்டு தேர்ச்சி சதவீதத்தையும் மாநில அளவிலான மதிப்பெண்களையும் பெற முந்துகின்றனர்.

ஊத்தங்கரை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை
சட்டமன்ற உறுப்பினர்

மனோரஞ்சிதம் (அதிமுக)

மக்கள் தொகை 15,393 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஊத்தங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊத்தங்கரை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வார்டுஎண் 1

ஊத்தங்கரை வார்டு எண் 1 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்டையில் 7 வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1277 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[5]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 1277 -ல் ஆண்கள் 673 (53%) ,பெண்கள் 604 (47%) ஆவார்கள். 92 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 8 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 56 சதவீதமும் , பெண்குழந்தைகள் 44 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 321 குடியிருப்புகள் உள்ளன.

வார்டுஎண் 2

ஊத்தங்கரை வார்டு எண் 2 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்டையில் 6 வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1287 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[6]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 1287 -ல் ஆண்கள் 608 (47%) ,பெண்கள் 679 (53%) ஆவார்கள். 81% சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள்.19% சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 54 சதவீதமும் , பெண்குழந்தைகள் 46 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 323 குடியிருப்புகள் உள்ளன.

வார்டுஎண் 3

ஊத்தங்கரை வார்டு எண் 3 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்படையில் கடைசியிடமான 15-வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 483 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[7]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 483 -ல் ஆண்கள் 237 (49%) ,பெண்கள் 246 (51%) ஆவார்கள். 99 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 1 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 38 சதவீதமும் , பெண்குழந்தைகள் 62 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 127 குடியிருப்புகள் உள்ளன.

வார்டுஎண் 4

ஊத்தங்கரை வார்டு எண் 4 ன் 2011 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இவ்வார்டு மக்கள்தொகை அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது. இதன் மொத்த மக்கள்தொகை 1473 ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ளது.[8]

விளக்கம்

மொத்த மக்கள்தொகையான 1473 -ல் ஆண்கள் 749 (51%) ,பெண்கள் 724 (49%) ஆவார்கள். 93 சதவீதம் பேர் பொதுப்பிரிவை சார்ந்தவர்கள். 7 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். மற்ற பிரிவினர் எவருமில்லை. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9 சதவீதம் உள்ளனர். அதில் ஆண்குழந்தைகள் 57 சதவீதமும் , பெண்குழந்தைகள் 43 சதவீதமும் உள்ளனர். தோராயமாக வீட்டிற்கு குறைந்தபட்சம் 4 பேர் கொண்ட 381 குடியிருப்புகள் உள்ளன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/a-single-school-puts-uthangarai-in-spotlight/article8613387.ece
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  5. indikosh.com › India › Tamil Nadu › Krishnagiri › Uthangarai › Uthangarai
  6. indikosh.com › India › Tamil Nadu › Krishnagiri › Uthangarai › Uthangarai
  7. http://indikosh.com/subd/704473/uthangarai
  8. http://indikosh.com/subd/704473/uthangarai
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.