தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டராம்பட்டு வட்டம் தின் வருவாய் கிராமமும்[1], தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியும்[2] ஆகும்.
தண்டராம்பட்டு | |
---|---|
பேரூராட்சி | |
அடைபெயர்(கள்): சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள நகரம் | |
![]() ![]() தண்டராம்பட்டு ![]() ![]() தண்டராம்பட்டு | |
ஆள்கூறுகள்: 12.1542969°N 78.9473388°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | திருவண்ணாமலை |
சட்டமன்றத் தொகுதி | செங்கம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
நிர்மாணித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை பேரூராட்சி |
• Body | தண்டராம்பட்டு பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | திருவண்ணாமலை |
• மக்களவை உறுப்பினர் | திரு.சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,096 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | தண்டராம்பட்டு |
சென்னையிலிருந்து தொலைவு | 211 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 17 கி.மீ |
செங்கத்திலிருந்து தொலைவு | 26 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 76 கிமீ |
அரூரிலிருந்து தொலைவு | 65 கிமீ |
இணையதளம் | தண்டராம்பட்டு பேரூராட்சி |
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி தண்டராம்பட்டில் 7,096 பேர் வாழ்கிறார்கள்.[3]
சிறப்பு
நீண்டகாலக் கோரிக்கையான தனித் தாலுக்க கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, எழுந்த தண்டராம்பட்டு புது வட்டத்திற்கு, இதுவே தலைமையகம் ஆகும்.
சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை 1958-இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது.
மேற்கோள்கள்
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=06¢code=0007&tlkname=Thandarampattu#MAP
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=06&blk_name=%27Thandrampet%27&dcodenew=6&drdblknew=9
- [http://census2001.tn.nic.in/pca2001.aspx Rural - Tiruvannamalai District;Chengam Taluk;Thandarampatti Village